Published:Updated:

`அதிர்ஷ்டத்தால் முதல்வரானவர் எடப்பாடி; முன்னேறி முதல்வராகிறார் ஸ்டாலின்!'- கருணாஸ் கலகல!

முக்குலத்தோர் சமுதாயத்தை அ.தி.மு.க அரசு தொடர்ந்து புறக்கணித்தது. அதனால் அந்தச் சமுதாய மக்களின் கோபம் அ.தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகளாக மாறியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``அதிர்ஷ்டத்தில் வந்தவர்கள் சிலர் முதல்வர் ஆனார்கள். ஆனால், அடிமட்ட தொண்டனிலிருந்து படிப்படியாக முன்னேறி இன்று முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கிறார் ஸ்டாலின். எங்களது சமுதாயத்தை அ.தி.மு.க அரசு புறக்கணித்ததால்தான் அவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது" என்று அ.தி.மு.க-வினரை விமர்சனம் செய்தார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்.

முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ்.
முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ்.

முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் திருச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். ``நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான முக்குலத்தோர் சமுதாயத்தை அ.தி.மு.க அரசு தொடர்ந்து புறக்கணித்தது. அதனால் அந்தச் சமுதாய மக்களின் கோபம் அ.தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகளாக மாறியுள்ளது. முக்குலத்தோர் சமுதாயத்தை ஒன்றிணைத்து `தேவர்’ என அழைக்க வேண்டும் என்ற அரசு உத்தரவு நிறைவேற்றப்படாமல் அப்படியே கிடப்பில் உள்ளது. இதுபோல் 12 அம்சக் கோரிக்கைகளை நான் அ.தி.மு.க அரசிடம் பலமுறை கொடுத்துள்ளேன்.

அது குறித்து வலியுறுத்தியதோடு பல போராட்டங்களையும் நடத்தியிருக்கிறேன். ஆனால் அ.தி.மு.க அரசு அதையெல்லாம் நிறைவேற்றவில்லை. தற்போது தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள்.

பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கருணாஸ்
பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கருணாஸ்

தென் மாவட்டங்களில் தி.மு.க வெற்றிபெற்றது தொடர வேண்டுமென்றால் முக்குலத்தோர் சமுதாயத்தின் 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அப்படி அவர் நிறைவேற்றிக் கொடுத்தால் எனது வாழ்நாள் முழுவதும் அவருக்கு விசுவாசமாக இருப்பேன். இதில் எந்த மாற்றமும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடந்து முடிந்த தேர்தல் ஜனநாயகத் தேர்தல் அல்ல, பணநாயகத் தேர்தல். பணம் கொடுக்கவில்லை எனப் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நடந்தது. இது வெட்கக்கேடான சம்பவம். இது அடுத்த தலைமுறையினர் மத்தியில் அரசியல் ஒரு வியாபாரம் என்ற நிலைக்குத் தள்ளும். இதையும் தாண்டி 40 லட்சம் பேர் நேர்மையாக வாக்களித்துள்ளனர்.

கருணாஸ்
கருணாஸ்

அந்த வாக்காளர்களின் பாதங்களைத் தொட்டுக் கழுவுவேன். அவர்களது ஜனநாயகக் கடமையை சரியாகச் செய்துள்ளார்கள். அ.தி.மு.க தோல்விக்கு முக்கியக் காரணம் எங்களது சமுதாயம் தான். அனைவருக்கும் சம உரிமை வழங்க வேண்டும்" என்றார்.

இனிவரும் காலங்களில் அ.தி.மு.க-வின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, ``அந்தக் கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. அதிர்ஷ்டத்தில் வந்தவர்கள் சிலர் முதல்வர் ஆனார்கள்" என்று எடப்பாடியை மறைமுகமாகப் பேசினார். ``தற்போது அடிமட்ட தொண்டனிலிருந்து படிப்படியாக முன்னேறி இன்று முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளார். அவருக்கு எது நல்லது கெட்டது என்கிற கள நிலவரம் தெரியும்" என கூறினார்.

தஞ்சாவூர்: `கட்சி நிர்வாகிகள் விலை போனதே தோல்விக்கு காரணம்!’ - திமுக வேட்பாளர் காட்டம்

அ.தி.மு.க-வில், சசிகலா மீண்டும் தலைவராக வாய்ப்பு உள்ளதா என்று கேட்டதற்கு, ``அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். அந்தக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இதில் நான் கருத்து சொல்ல முடியாது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு