Published:Updated:

`நிழல் முதல்வர்' கிரிராஜன் - எடப்பாடியின் தனிச்செயலாளரிடம் பவ்யம் காட்டும் அமைச்சர்கள்!

கழுகார்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் கடந்த வாரம் சென்னை விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா சென்ற தகவல், உளவுத்துறையின் மூலம் மத்திய அரசுக்குச் சென்றுள்ளது.

edappadi palanisamy
edappadi palanisamy

ஆகஸ்ட் 21-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பயணத்திட்டம் இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது. உத்தேசப் பயணத்திட்டத்தின்படி ஆகஸ்ட் 28-ம் தேதி சென்னையிலிருந்து முதல்வர் புறப்படுகிறார்.

முதல்வருடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் படை சென்றாலும், முதல்வருடன் அவர்கள் ஒன்றாகப் பயணிக்கவோ, தங்கவோ போவதில்லையாம். "அமைச்சர்கள், அந்தந்தத் துறை அதிகாரிகளோடு இருந்து கொள்ளுங்கள். தேவைப்படும்போது முதல்வருடன் இணைந்துகொள்ளலாம்" என்று சொல்லப்பட்டுள்ளதாம். ஆனால், முதல்வரின் தனிச்செயலாளர் கிரிராஜன் மட்டுமே இந்தப் பயணம் முழுவதிலும் முதல்வருடன் இருக்கப் போகிறார் என்கிறார்கள்." https://bit.ly/30jNgrW

கொல்கத்தா சென்ற மிதுன், அங்கு உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். அங்கு மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவரைச் சந்தித்துள்ளார்

தலைமைச் செயலகத்தில் கிரிராஜனைத்தான் "நிழல் முதல்வர்" என்று வர்ணிக்கிறார்கள். இந்தப் பயணத்திலும் அவருடைய பெயரே பெரிதாக உச்சரிக்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2011-ம் ஆண்டுமுதலே அவருடைய தனிச்செயலளாராக இருப்பவர்தான் கிரிராஜன். அதற்கு முன்பு அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் உதவியாளராக இருந்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் என்று அனைத்தையும் முடிவுசெய்வது முதலமைச்சர் அலுவலகம்தான். அதனால், உயர் அதிகாரிகள் மட்டுமல்லாது, பிற துறை அமைச்சர்களும்கூட கிரிராஜனிடம் பரமபவ்யம் காட்டுவது கட்டாயமாகவே இருக்கிறது!

இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் கடந்த வாரம் சென்னை விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா சென்ற தகவல், உளவுத்துறையின் மூலம் மத்திய அரசுக்குச் சென்றுள்ளது. கொல்கத்தா சென்ற மிதுன், அங்கு உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். அங்கு மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவரைச் சந்தித்துள்ளார். அதுதான் இப்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது. அவரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்தான். பெயர் பிரபாகரன். 'திருவேணி எர்த்மூவர்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்கிற கனிமவள சாம்ராஜ்யத்தை ஒடிசாவில் நடத்திவருபவர். தமிழக முதல்வருக்கு நெருக்கமான இந்தத் தொழிலதிபர், தற்போது காங்கோ உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளிலும் தொழிலை விரிவுபடுத்தியுள்ளார்.

`நிழல் முதல்வர்' கிரிராஜன் - எடப்பாடியின் தனிச்செயலாளரிடம் பவ்யம் காட்டும் அமைச்சர்கள்!

திருவேணி குழுமத்தின் சார்பில், விரைவில் சேலம் பகுதியில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கனிமத்தைச் சுத்திகரிக்கும் தொழிற்சாலை ஒன்று அமையவுள்ளது. இந்தத் தொழிற்சாலையில் முதல்வரின் குடும்பத்துக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்கிறார்கள். இத்தகைய சூழலில்தான், முதல்வர் மகனும் 'திருவேணி' பிரபாகரனும் ஆகஸ்ட்-18 அன்று கொல்கத்தாவிலிருந்து லண்டனுக்குப் பயணப்பட்டுவிட்டனர். கேட்டால் இருவருக்கும் நல்ல நட்பு என்கிறார்கள்!

- 'அப்பா, அரசு முறைப் பயணம்; மகன், நட்பு முறைப் பயணமா?', காவல்துறை பனிப்போர், ஆளுங்கட்சியிடம் கையேந்திய தி.மு.க, "உதயநிதிக்கு வேலுமணி செக்!" உள்ளிட்ட பல தகவல்களைத் தருகிறார் கழுகார். இவற்றை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > மிஸ்டர் கழுகு: கொல்கத்தா டு லண்டன் - சென்னை டு அமெரிக்கா - "முதலீட்டு" ரகசியங்கள்! https://www.vikatan.com/government-and-politics/politics/mr-kazhugu-politics-and-current-affairs-13

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/