Published:Updated:

ஷ்ரத்தா கொலை: "படித்த பெண்கள் லிவ்-இன் உறவில் ஈடுபடக் கூடாது!" - மத்திய அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர்

``அவர்கள் ஏன் லிவ்-இன் உறவுகளில் வாழ்கிறார்கள்... அப்படிச் செய்ய வேண்டுமென்றால், லிவ்-இன் உறவுகளுக்கு முறையான பதிவு இருக்க வேண்டும்." - மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர்

ஷ்ரத்தா கொலை: "படித்த பெண்கள் லிவ்-இன் உறவில் ஈடுபடக் கூடாது!" - மத்திய அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

``அவர்கள் ஏன் லிவ்-இன் உறவுகளில் வாழ்கிறார்கள்... அப்படிச் செய்ய வேண்டுமென்றால், லிவ்-இன் உறவுகளுக்கு முறையான பதிவு இருக்க வேண்டும்." - மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர்

Published:Updated:
மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர்

டெல்லியில், இளம்பெண்ணுடன் லிவ்-இன் உறவில் இருந்துவந்த இளைஞர் ஒருவர், இளம்பெண்ணை 35 துண்டுகளாக வெட்டிக் கொலைசெய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் மே மாதமே நடந்திருந்தாலும், ஆறு மாதங்களுக்குப் பிறகு... தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட கொலையாளி அல்தாஃப் பூனாவாலாவை தூக்கிலிட வேண்டும் எனப் பல கண்டனங்கள் எழுந்துவருகின்றன.

அஃப்தாப் அமீன் பூனாவாலா - ஷ்ரத்தா
அஃப்தாப் அமீன் பூனாவாலா - ஷ்ரத்தா
ட்விட்டர்

இந்த நிலையில், மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர், ``இது போன்ற சம்பவங்களெல்லாம், நன்றாகப் படித்தவர்கள், தாங்கள் மிகவும் வெளிப்படையானவர்கள், தங்கள் எதிர்காலத்தைப் பற்றி முடிவெடுக்குமளவுக்குத் திறன்கொண்டவர்கள் என்று தங்களைத் தாங்களே நினைக்கும் எல்லாப் பெண்களிடமும் நடக்கின்றன.

மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர்
மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர்

அவர்கள் ஏன் லிவ்-இன் உறவில் வாழ்கிறார்கள்... அப்படிச் செய்ய வேண்டுமென்றால், லிவ்-இன் உறவுகளுக்கு முறையான பதிவு இருக்க வேண்டும். மேலும், பெற்றோர்கள் அத்தகைய உறவுகளுக்கு விருப்பம் தெரிவிக்கவில்லையென்றால், பதிவுத் திருமணம் செய்துவிட்டு ஒன்றாக வாழ வேண்டும். பெண்கள் ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்பதை கவனித்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், படித்த பெண்கள் இது போன்ற உறவுகளில் ஈடுபடக் கூடாது" என்று ஷ்ரத்தா கொலை தொடர்பாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி
சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி

கவுஷல் கிஷோரின் இத்தகைய கருத்து பேசுபொருளாகியிருக்கும் நிலையில், சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி, ``வெட்கமற்ற, இதயமற்ற, கொடூரமான எல்லா பிரச்னைகளுக்கும் பெண்களைக் குற்றம் சொல்லும் மனநிலை தொடர்ந்து வளர்ந்துவருகிறது" என கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.