Published:Updated:

எடப்பாடி பழனிசாமி இப்போதாவது கல்வித்தகுதியை சரியாகச் சொல்லியிருக்கிறாரா? #DoubtOfCommonMan

அடிமட்டத் தொண்டராக இருக்கும்போது பள்ளிக்கூடமே போகாதவர்கள் தலைவர்களானால், விதவிதமான பட்டங்கள் ஒட்டிக்கொள்கின்றன. அவ்வப்போது இது அம்பலமாவதும் உண்டு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் பி.லோகேஷ் என்ற வாசக,ர் "தமிழக முதலமைச்சர் மற்றும் இந்திய பிரதமரின் கல்வித்தகுதி என்ன?" என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

2011 சட்டசபைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை வேட்பாளராக அறிவித்தபோது, அவர் பெயருக்குப் பின்னால் 'பி.எஸ்சி' என்று குறிப்பிட்டு அதனை அடைப்புக்குறிக்குள் காட்டியிருந்தார் ஜெயலலிதா. இதன் பொருள், அவர் தேர்ச்சி பெறவில்லை என்பதுதான். எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல்செய்தபோது அதில், ஈரோடு ஸ்ரீவாசவி கல்லூரியில் 1976-ம் ஆண்டு 'பி.எஸ்சி' படித்ததாகவும் ஆனால், தேர்ச்சிபெறவில்லை என்றும் சொல்லியிருந்தார். ஆனால், தேர்தலில் வென்றபிறகு சட்டசபையில் அவர் அளித்த ஆவணத்தில், 'பி.எஸ்சி' பட்டதாரி என்று குறிப்பிட்டார்.

அதன் அடிப்படையில், அப்போதைய சட்டசபை இணையதளத்தில், அவர் பெயருக்குப் பின்னால் 'பி.எஸ்சி' என குறிப்பிட்டிருந்தார்கள். இதுபற்றி 'போலி டிகிரி... படிக்காத மந்திரி' என்ற தலைப்பில் அப்போது ஜூனியர் விகடனில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். செய்திக்கான இணைப்பு - https://www.vikatan.com/news/politics/36049--2

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

2016 சட்டசபைத் தேர்தல் வேட்பாளர் பட்டியலிலும் எடப்பாடி பழனிசாமி பெயருக்குப் பின்னால் முந்தைய தேர்தலைப் போலவே 'பி.எஸ்சி' என குறிப்பிட்டு, அதனை அடைப்புக் குறிக்குள் காட்டியிருந்தார்கள். அவருடைய வேட்புமனுவில் முன்பு போலவே 'பி.எஸ்சி தேர்ச்சி பெறவில்லை' எனக் குறிப்பிட்டிருந்தார் எடப்பாடி. சட்டசபை ஆவணங்களில் அதே தகவல்தான் இடம்பெற்றிருக்கிறது. அதாவது, 'பி.எஸ்சி' அடைப்புக்குறிக்குள் இடம்பெற்றிருக்கிறது. 2011 சட்டசபைத் தேர்தலின்போது, சட்டசபையில் மட்டும் 'பி.எஸ்சி' பட்டதாரி என சொல்லப்பட்டிருந்தது. 2016 தேர்தலில் அப்படியே அது மாறிப்போனது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி எம்.ஏ. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி போட்டியிட்டபோது, தனது வேட்புமனுவோடு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், தன்னுடைய உயரளவு கல்வித் தகுதியாக எம்.ஏ பட்டத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.

மோடி
மோடி

1967-ல் குஜராத்தில் செக்கண்டரி எக்ஸாமில் பாஸ் செய்திருக்கிறார். டெல்லி பல்கலைக்கழகத்தில் 1978-ம் ஆண்டு பி.ஏ படித்திருக்கிறார். அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் 1983-ம் ஆண்டு எம்.ஏ படித்திருக்கிறார். செக்கண்டரி தேர்வில் அவர் வெற்றிபெற்ற பிறகு ,இடையில் பத்தாண்டுகள் கழித்துத்தான் பி.ஏ சேர்ந்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு