Published:Updated:

இரு முறை ராஜ் தாக்கரேவுடன் பேசிய ஷிண்டே! - நவநிர்மாண் சேனாவுடன் இணையுமா சிவசேனா அதிருப்தி கோஷ்டி?

ராஜ் தாக்கரே

சிவசேனா அதிருப்தி கோஷ்டித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவுடன் இரண்டு முறை போனில் பேசியிருக்கிறார்.

இரு முறை ராஜ் தாக்கரேவுடன் பேசிய ஷிண்டே! - நவநிர்மாண் சேனாவுடன் இணையுமா சிவசேனா அதிருப்தி கோஷ்டி?

சிவசேனா அதிருப்தி கோஷ்டித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவுடன் இரண்டு முறை போனில் பேசியிருக்கிறார்.

Published:Updated:
ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் அரசியலில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வுகாணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சிவசேனா அதிருப்தி கோஷ்டியில் சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் 40 பேர் உட்பட 50 பேர் இருக்கின்றனர். அவர்களின் துணையோடு பா.ஜ.க ஆட்சியமைக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. அதிருப்தி கோஷ்டிக்கு மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ-க்கள் இருந்தாலும், அவர்கள் தனி அணியாகச் செயல்பட முடியாது. புதிய கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின்படி மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒரு கட்சியிலிருந்து பிரிந்தால், அவர்கள் வேறு ஒரு கட்சியில்தான் தங்களை இணைத்துக்கொள்ள முடியும். தனி அணியாகச் செயல்பட முடியாது. எனவே, தங்களது அணியை பா.ஜ.க-வுடன் இணைக்க அதிருப்தி அணித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே திட்டமிட்டார். ஆனால் அதற்கு அதிருப்தி எம்.எல்.ஏ-க்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மாற்று திட்டத்தை ஏக்நாத் ஷிண்டே பரிசீலித்துவருகிறார்.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

அதன் ஒரு பகுதியாக ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். ராஜ் தாக்கரே அறுவை சிகிச்சைக்குப் பிறகு நேற்றுதான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆரம்பத்தில் உடல்நலம் குறித்து விசாரித்த ஏக்நாத் ஷிண்டே, அடுத்து மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக இரண்டு முறை ராஜ் தாக்கரேவுடன் ஏக்நாத் ஷிண்டே ஆலோசனை நடத்தியிருக்கிறார். இதில் அதிருப்தி கோஷ்டியை நவநிர்மாண் சேனாவுடன் இணைப்பது குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. 2006-ம் ஆண்டு உத்தவ் தாக்கரேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சிவசேனாவிலிருந்து விலகி ராஜ் தாக்கரே தனிக்கட்சி ஆரம்பித்தார். ராஜ் தாக்கரேவுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராஜ் தாக்கரே
ராஜ் தாக்கரே

அதோடு சமீபகாலமாக பா.ஜ.க-வுடன் இணைந்து ராஜ் தாக்கரே செயல்பட ஆரம்பித்திருக்கிறார். பா.ஜ.க-வின் இந்துத்துவா கொள்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவருகிறார். சிவசேனா அதிருப்தி கோஷ்டி இணைப்பு குறித்து ராஜ் தாக்கரே கட்சி நிர்வாகி பாலா நந்த்காவ்கரிடம் கேட்டதற்கு, ``ஏக்நாத் ஷிண்டே அணியை நவநிர்மாண் சேனாவுடன் இணைப்பது குறித்து விவாதிக்கவில்லை" என்று தெரிவித்தார்.