Published:Updated:

மும்பை: ``ஏக்நாத் ஷிண்டே - பட்னாவிஸ் ஜோடி உங்கள் கனவுகளை நிறைவேற்றும்” - பிரதமர் மோடி

ஏக்நாத் ஷிண்டே -மோடி - பட்னாவிஸ்

``மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே - துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஜோடி மும்பை மக்களின் கனவுகளை நிறைவேற்றும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

மும்பை: ``ஏக்நாத் ஷிண்டே - பட்னாவிஸ் ஜோடி உங்கள் கனவுகளை நிறைவேற்றும்” - பிரதமர் மோடி

``மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே - துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஜோடி மும்பை மக்களின் கனவுகளை நிறைவேற்றும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ஏக்நாத் ஷிண்டே -மோடி - பட்னாவிஸ்

மும்பையில் ரூ.38,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியை மும்பை மாநகராட்சி தேர்தலுக்கான பிரசார தொடக்க நிகழ்ச்சியாகவும் நடத்த பாஜக திட்டமிட்டிருந்தது. மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தேரி குண்ட்வாலி மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், தகிசர்-டி.என்.நகர் மெட்ரோ ரயில் திட்டம், அந்தேரி கிழக்கு-தகிசர் கிழக்கு இடையிலான இரு மெட்ரோ ரயில் திட்டங்களைத் தொடங்கிவைத்து அதில் சிறிது தூரம் பயணம் செய்தார் பிரதமர் மோடி.

மும்பை: ``ஏக்நாத் ஷிண்டே - பட்னாவிஸ் ஜோடி உங்கள் கனவுகளை நிறைவேற்றும்” - பிரதமர் மோடி

இது தவிர பாந்த்ரா - குர்லா காம்ப்ளக்ஸில் நடந்த விழாவில் தாராவி உட்பட ஏழு இடங்களில் 17,200 கோடியில் அமைக்கப்பட இருக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். அதோடு, மும்பையில் 400 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலைகளை கான்கிரீட் மயமாக்கும் திட்டத்தையும் மோடி தொடங்கிவைத்தார். மெட்ரோ ரயிலுக்கான மொபைல் ஆப், மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கான ஒரே கார்டையும் தொடங்கிவைத்தார். இது தவிர சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளையும் தொடங்கிவைத்தார். மொத்தம் 38 கோடி மதிப்பிலான திட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ``முன்பெல்லாம் நமது வறுமையைப் பற்றி உலக நாடுகள் பேசின. மற்ற நாடுகளிடம் நாம் உதவி கேட்டோம். ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது.

`இரட்டை இஞ்சின் அரசு’ மக்களின் நலனுக்காக விடாமுயற்சியுடன் பணியாற்றுவது அவசியம். முந்தைய அரசில் ஊழல் கறை படிந்திருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு நாடு மிகப்பெரிய கனவு கண்டிருக்கிறது. அந்தக் கனவு நனவாகியும் இருக்கிறது. முதல் முறையாக மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகள்கூட பொருளாதாரத்தைச் சமாளிக்கப் போராடுகின்றன. அதேசமயம் இந்தியா 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. `இரட்டை இஞ்சின்’ ஆட்சியில் ரயில் நிலையங்கள்கூட விமான நிலையங்கள்போல் காட்சியளிக்கின்றன. வளர்ச்சித் திட்டப்பணியில் ஊழல் நுழைய பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் அனுமதிக்காது. ஆனால், வளர்ச்சித் திட்டத்தில் ஊழல் நுழைந்ததை மும்பை இதற்கு முன்பு கண்டிருக்கிறது.

மோடிக்கு நினைவுப் பரிசு
மோடிக்கு நினைவுப் பரிசு

ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் ஜோடி மும்பை மக்களின் கனவுகளை நிறைவேற்றும். மும்பை வளர்ச்சிக்கு நிதி ஒரு பிரச்னை கிடையாது. தாராவி மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த இந்த அரசு உறுதிபூண்டிருக்கிறது. ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க அரசு உறுதி பூண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

முன்னதாக தேவேந்திர பட்னாவிஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் பேசினர். அவர்கள், முந்தைய சிவசேனா கூட்டணி அரசைக் கடுமையாக விமர்சித்தனர். மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவிக்கு வந்த பிறகு முதல் முறையாக நரேந்திர மோடி மும்பை வந்திருந்தார். மோடியின் வருகையையொட்டி நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.