Published:Updated:

`நாங்களே உண்மையான சிவசேனா!' - 34 எம்எல்ஏ-க்கள் கையெழுத்தோடு ஆளுநகருக்கு கடிதம் அனுப்பிய ஏக்நாத்

சூரத்தில் போட்டோ எடுத்துக்கொண்ட எம்.எல்.ஏ.க்கள்

சிவசேனாவிலிருந்து பா.ஜ.க பக்கம் சேர்ந்துள்ள அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனக்கு 34 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

`நாங்களே உண்மையான சிவசேனா!' - 34 எம்எல்ஏ-க்கள் கையெழுத்தோடு ஆளுநகருக்கு கடிதம் அனுப்பிய ஏக்நாத்

சிவசேனாவிலிருந்து பா.ஜ.க பக்கம் சேர்ந்துள்ள அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனக்கு 34 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

Published:Updated:
சூரத்தில் போட்டோ எடுத்துக்கொண்ட எம்.எல்.ஏ.க்கள்

மகாராஷ்டிரா அரசியலில் கடந்த இரண்டு நாள்களாக நெருக்கடி நிலை காணப்படுகிறது. சிவசேனாவைச் சேர்ந்த 40-க்கும் அதிகமான எம்.எல்.ஏ-க்கள் தனி அணியாகப் பிரிந்து அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜ.க பக்கம் சென்றுள்ளனர். அவர்களை சமாதானப்படுத்த சிவசேனா எடுத்த நடவடிக்கைகள் எதுவும் பலனலிக்கவில்லை. இதனால் இன்று அமைச்சரவைக் கூட்டம் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு பேட்டியளித்த அமைச்சர், `சட்டமன்றத்தை கலைக்கும் திட்டம் இல்லை' என்று தெரிவித்தார்.

முதல்வர் உத்தவ் தாக்கரேயும் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று தெரிவித்தார். அதேசமயம் மாலையில் நடக்கும் சிவசேனா எம்.எல்.எ.க்கள் கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு கலந்துகொள்ளவில்லை எனில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவசேனா கொறடா சுனில் பிரபு வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

சிவசேனாவின் கொறடா உத்தரவைத் தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே அவசரமாக தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களை கூட்டி இது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் அரசு நிர்வாகத்தில் காணப்பட்ட ஊழல் காரணமாக ஏற்பட்ட அதிருப்தி மற்றும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளால் ஏற்பட்ட துன்புறுத்தல் மற்றும் மனவருத்தம் போன்றவையும் தனி அணியாக செயல்படுவதற்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தன. அதோடு சிவசேனாவின் முக்கியமான கொள்கையில் சமரசம் செய்துகொண்டு அதிகாரத்திற்காக கூட்டணி வைத்ததை தீர்மானம் குறை கூறியது. கூட்டத்தில் கலந்துகொண்ட 34 எம்.எல்.ஏ-க்களிடம் கையெழுத்து பெற்று மகாராஷ்டிரா ஆளுநருக்கு ஏக்நாத் ஷிண்டே அனுப்பியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

அதில் சிவசேனா சட்டமன்ற குழு தலைவராக தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தொடருவார் என்றும், உத்தவ் தாக்கரே நியமித்த கொறடா சுனில் பிரபுவை நீக்கிவிட்டு பரத் கோகாவாலே என்பவரை கொறடாவாக நியமித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கொறடாவையும் ஏக்நாத் ஷிண்டே நியமித்திருப்பதால் தனது அணிதான் உண்மையான சிவசேனா என்பது போல் காட்டிக்கொண்டுள்ளார். ஷிண்டேவின் கடிதத்தை தொடர்ந்து சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை உத்தவ் தாக்கரே ரத்து செய்துள்ளார். இதற்கிடையே மேலும் 4 எம்.எல்.ஏ-க்களுடன் மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கவுகாத்திக்கு புறப்பட்டு சென்றார். ஆளுநரும், முதல்வரும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிக்க ஏக்நாத் ஷிண்டேவுக்கு 37 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவையாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism