Published:Updated:

கடைசி நேர ட்விஸ்ட்; மகாராஷ்டிரா முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே!

தேவேந்திர பட்நவிசை சந்தித்த ஷிண்டே

இரண்டு முறை முதல்வராகப் பதவி வகித்த தேவேந்திர பட்னாவிஸ், மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்னாவிஸ் ஷிண்டேவை முதல்வராக அறிவித்திருக்கிறார்.

கடைசி நேர ட்விஸ்ட்; மகாராஷ்டிரா முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே!

இரண்டு முறை முதல்வராகப் பதவி வகித்த தேவேந்திர பட்னாவிஸ், மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்னாவிஸ் ஷிண்டேவை முதல்வராக அறிவித்திருக்கிறார்.

Published:Updated:
தேவேந்திர பட்நவிசை சந்தித்த ஷிண்டே

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்திருப்பதால், பா.ஜ.க ஆதரவுடன் புதிய அரசு பதவியேற்கவிருக்கிறது. முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று இரவு தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. இன்று பிற்பகல் ஏக்நாத் ஷிண்டே மட்டும் கோவாவிலிருந்து அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்துடன் மும்பை வந்துசேர்ந்தார். அவர் மும்பை விமான நிலையத்திலிருந்து தென் மும்பைக்குச் சென்றபோது, அவரது கார் சென்ற வழித்தடத்தில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. நேராக பட்னாவிஸ் இல்லத்துக்கு ஷிண்டே சென்றார். அங்கிருந்து தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் ராஜ்பவன் சென்று ஆளுநர் பகத்சிங் கோஷாரியாவைச் சந்தித்துப் பேசினர்.

பட்னாவிஸ்
பட்னாவிஸ்

இந்த சந்திப்பின்போது அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ-க்கள் கொடுத்திருந்த ஆதரவு கடிதத்தை ஏக்நாத் ஷிண்டே ஆளுநரிடம் கொடுத்தார். சட்டமன்றத்தில் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவேண்டும் என்று கோரி ஆளுநரிடம் தேவேந்திர பட்னாவிஸ் கோரிக்கை விடுத்தபோது, உடனே ஆளுநர் கோஷாரியா முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார். அதே போன்று தற்போது ஆட்சியமைக்க தேவேந்திர பட்னாவிஸ் உரிமை கோரியவுடன் ஆளுநர் ஆட்சியமைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

இந்த நிலையில், ஆளுநரைச் சந்தித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், ``மகாராஷ்டிராவின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே இன்று மாலை 7:30 மணிக்கு பதவியேற்பார்" எனத் தெரிவித்தார். இரண்டு முறை முதல்வராகப் பதவி வகித்த தேவேந்திர பட்னாவிஸ், மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்னாவிஸ் ஷிண்டேவை முதல்வராக அறிவித்திருக்கிறார்.