Published:Updated:

கூட்டணி குஸ்திகள்

ராதிகா
பிரீமியம் ஸ்டோரி
ராதிகா

‘‘எங்களுக்கே இன்னும் எத்தனை சீட் என்று முடிவாகவில்லை... அதனால், பொறுத்திருங்கள்’’

கூட்டணி குஸ்திகள்

‘‘எங்களுக்கே இன்னும் எத்தனை சீட் என்று முடிவாகவில்லை... அதனால், பொறுத்திருங்கள்’’

Published:Updated:
ராதிகா
பிரீமியம் ஸ்டோரி
ராதிகா

இறங்கி வந்த அன்சாரி... தூதுவிடும் கருணாஸ்... வெயிட்டிங்கில் தனியரசு!

கடந்த சட்டமன்றத் தேர்தலில், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகிய மூவரில், தமிமுன் அன்சாரி தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தையை நடத்திவிட்டார். ‘தற்போது கைவசமுள்ள நாகப்பட்டினம் தொகுதியோடு, கூடுதலாக ஒரு தொகுதி வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார். ‘‘முதலில் எங்கள் கூட்டணியிலுள்ள கட்சிகளோடு பேச்சுவார்த்தையை முடித்துக்கொள்கிறோம்’’ என்று சொல்லியிருக்கிறது தி.மு.க தரப்பு. ‘உதயசூரியன் சின்னத்தில் நிற்கவும் தயார்’ என்று இறங்கிவந்துவிட்டார் தமிமுன் அன்சாரி.

கூட்டணி குஸ்திகள்

‘‘சசிகலாவுடன் அ.தி.மு.க இணைந்து செயல்பட வேண்டும்’’ என்று குரல் கொடுத்த கருணாஸை அ.தி.மு.க கழற்றிவிட்டிருக்கிறது. சசிகலா தரப்பிலிருந்து, ‘‘சின்னம்மாவை வந்து பாருங்கள்’’ என்று அழைத்ததோடு, ‘`ஜெயலலிதா பிறந்தநாள் அன்று சந்திக்கலாம்’’ என்றும் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அன்றைக்கு சசிகலா தரப்பை கருணாஸ் தொடர்புகொண்டபோது, யாருமே போனை எடுக்கவில்லையாம். இதில் ஏக அப்செட்டான கருணாஸ், ‘இனி, இவர்களை நம்பக் கூடாது’ என்று தனக்குத் தெரிந்த சோர்ஸ்கள் மூலம் தி.மு.க-வுக்குத் தூதுவிட்டுவருகிறார். இரண்டு கூட்டணியில் எதற்குச் செல்வது என்பதைப் பொறுமையாக முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று தனியரசு வெயிட்டிங்கில் இருக்கிறாராம்.

கூட்டணி குஸ்திகள்

“பொறுத்திருங்கள் கிருஷ்ணசாமி!”

‘புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமியைக் கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டிருக்கிறது அ.தி.மு.க தலைமை. தி.மு.க-வுடனும் இணைய வாய்ப்பில்லை என்பதால், பா.ஜ.க மூலம் காய்நகர்த்த முயன்றுவருகிறாராம். ‘உங்களுக்குக் கிடைக்கும் தொகுதிகள் ஒன்றில் நான் நிற்கிறேன்’ என்கிறரீதியில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். ‘‘எங்களுக்கே இன்னும் எத்தனை சீட் என்று முடிவாகவில்லை... அதனால், பொறுத்திருங்கள்’’ என்று பதில் சொல்லிவிட்டதாம் பா.ஜ.க தலைமை.

கூட்டணி குஸ்திகள்

களமிறங்கக் காத்திருக்கும் ராதிகா!

கணவர் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சியில், பட்டும்படாமல் மட்டுமே இத்தனை காலம் செயல்பட்டுவந்தார் நடிகை ராதிகா. இனி பிரேமலதா பாணியில் நேரடியாகக் களத்தில் இறங்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டாராம். கமலுடன் சரத்குமார் நடத்திய சந்திப்புக்கு முன்பாக, ராதிகா தரப்பிலிருந்தே கமலுடன் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் கூட்டணி முதல் வேட்பாளர்கள் தேர்வுவரை சுற்றிச் சுழன்று கட்சிக்காகப் பணியாற்ற முடிவெடுத்திருக்கிறாராம் ராதிகா.

கூட்டணி குஸ்திகள்

‘இம்புட்டா... முடியலிங்க!’ - வெளியேறிய ஐ.ஜே.கே

‘ஐ.ஜே.கே - சமத்துவ மக்கள் கட்சி’ இடையே கூட்டணி உருவாக, தி.மு.க தரப்பில் கொடுக்கப்பட்ட அழுத்தமும் மறைமுகக் காரணம் என்று கிண்டலாகச் சொல்கிறார்கள். ‘‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க தரப்புக்கு கணிசமாக ‘விட்டமின் பா’வை வாரி இறைத்திருந்தார் ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர். கூட்டணி சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பி-யாகவும் ஆனார். இம்முறை முன்னைக்காட்டிலும் ‘கூடுதலாக’ பாரிவேந்தரிடம் கேட்டிருக்கிறது தி.மு.க தரப்பு. ‘இம்புட்டா... முடியலிங்க!’ என அதிர்ச்சியில் கூட்டணியைவிட்டே வெளியேறிவிட்டது ஐ.ஜே.கே’’ என்கிறார்கள் வேந்தருக்கு நெருக்கமானவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism