Published:Updated:

``இலவசங்கள் குறித்த பிரச்னைகளை ஒழுங்குபடுத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை!" - காங்கிரஸ்

காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் ( Yann Forget / Wikimedia Commons )

``இது போன்ற பிரச்னைகளை நியாயப்படுத்துவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் தேர்தல் ஆணையத்துக்கோ, அரசாங்கத்துக்கோ, நீதிமன்றங்களுக்கோ அதிகாரம் இல்லை." - ஜெய்ராம் ரமேஷ்

தேர்தல்களின்போது அரசியல் கட்சிகளால் அளிக்கப்படும் `இலவசங்கள்' குறித்த வாக்குறுதிகளுக்கெதிராக அண்மையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க `ரேவடி கலாசாரம்' எனப் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துவந்தது. இதற்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளும் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவந்தன.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையமும், `இலவசங்களை வழங்குவது அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவு, அதைக் கட்டுப்படுத்த முடியாது' என முன்பு கூறியிருந்தது. இந்த நிலையில், இலவசங்கள் குறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், இந்திய தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ்
காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ்
Yann Forget / Wikimedia Commons

அதில், ``இலவசங்கள் என்பது துடிப்பான ஜனநாயக அமைப்பின் ஓர் இயங்கியல் பகுதி. அவை அரசியலின் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடையவை. அதுமட்டுமல்லாமல், இது போன்ற பிரச்னைகளை நியாயப்படுத்துவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் தேர்தல் ஆணையத்துக்கோ, அரசாங்கத்துக்கோ, நீதிமன்றங்களுக்கோ அதிகாரம் இல்லை. எனவே, தேர்தல் ஆணையம் அவ்வாறு செய்வதைத் தவிர்ப்பது சிறந்தது" என ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார்.