Published:Updated:

அதிமுக: மீண்டும் பொதுச் செயலாளர் சர்ச்சை... கொளுத்திப் போட்ட தேர்தல் ஆணையம்!

தேர்தல் ஆணையம்

அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அளித்திருக்கும் பதில், அரசியல் அரங்கை சூடாக்கியுள்ளது

அதிமுக: மீண்டும் பொதுச் செயலாளர் சர்ச்சை... கொளுத்திப் போட்ட தேர்தல் ஆணையம்!

அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அளித்திருக்கும் பதில், அரசியல் அரங்கை சூடாக்கியுள்ளது

Published:Updated:
தேர்தல் ஆணையம்

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபறக்கும் நிலையில், 'பொதுச் செயலாளர் விவகாரத்தை நாங்கள் செயல்பாட்டில் வைத்திருக்கிறோம்' என ஆர்.டி.ஐ கேள்வி ஒன்றிற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பதிலளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆர்.டி.ஐ கேள்வியை, அ.தி.மு.க-விலிருந்து விலகிய, அக்கட்சியின் முன்னாள் ஐ.டி-விங் செயலாளர் ஆஸ்பயர் ஸ்வாமிநாதன்தான் எழுப்பியிருக்கிறார். இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் ஆறு கேள்விகளை அவர் கேட்டிருந்த நிலையில், பொதுச் செயலாளர் விவகாரம் தொடர்பாக மட்டும் வெடியைக் கிள்ளி எறிந்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

ஆஸ்பயர் சுவாமிநாதன்
ஆஸ்பயர் சுவாமிநாதன்

இது தொடர்பாக ஆஸ்பயர் ஸ்வாமிநாதனிடம் பேசினோம். "ஆர்.டி.ஐ மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்தில், அ.தி.மு.க-வின் கட்டமைப்பு தற்போது எவ்வாறு மாற்றப்பட்டிருக்கிறது? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் ஆணையம் நிரந்தர அனுமதி வழங்கிவிட்டதா? எனக் கேள்விகளைக் கேட்டிருந்தேன். அதற்கு, அவர்கள் அனுப்பியிருக்கும் பதிலில், 'இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வெப்சைட்டில், அதற்குரிய தரவுகள் உள்ளன' என பதிலளித்துள்ளனர். அதேபோல, எந்த அதிகாரத்தின் அடிப்படையில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அனுமதி வழங்கியது? என்கிற கேள்வியையும் எழுப்பினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்தக் கேள்விகளுக்கு, 'இந்தியத் தேர்தல் ஆணையரின் கருத்தைக் கேட்கிறீர்கள். அதை எங்களால் தர இயலாது' என்று பதிலளித்துள்ளனர். பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டது தொடர்பாகவும், அப்பதவிக்கு உரிய முறையில் தேர்தல் நடத்தி, பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்கும்படி அ.தி.மு.க-வுக்கு உத்தரவிடக் கோரியும் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி, முன்னாள் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் புகழேந்தி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தனர். இந்த மனுக்களின் தற்போதைய நிலை குறித்து கடைசியாகக் கேள்வி எழுப்பியிருந்தேன். அதற்கு, 'நீங்கள் கேட்டிருக்கும் தரவுகள் செயல்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன' என்று பதிலளித்திருக்கிறது தேர்தல் ஆணையம். பரிசீலனை செய்கிறோம், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது, விசாரித்து வருகிறோம் என ஏதாவது ஒரு பதிலை தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கலாம். ஆனால், 'செயல்பாட்டில் உள்ளது' என தேர்தல் ஆணையம் பதிலளித்திருப்பதுதான், அரசியல் சரவெடியைப் பற்ற வைத்திருக்கிறது" என்றார்.

ஆர்.டி.ஐ பதில்
ஆர்.டி.ஐ பதில்
அதிமுக: மீண்டும் பொதுச் செயலாளர் சர்ச்சை... கொளுத்திப் போட்ட தேர்தல் ஆணையம்!

2017-ம் ஆண்டு, அ.தி.மு.க-வில் இரு அணிகளும் பிளவுப்பட்டிருந்த நேரத்தில், அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஆர்.டி.ஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தார் ஆஸ்பயர் ஸ்வாமிநாதன். அப்போது அவருக்கு அனுப்பிய பதிலில், 'இந்திய தேர்தல் ஆணையத்திலுள்ள தரவுகளின்படி, ஜெயலலிதாதான் பொதுச் செயலாளராக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார். அவர் மரணத்துக்குப் பிறகு, தான் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக சசிகலா என்பவர் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். ஆனால், சசிகலாவின் தேர்வில் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால், அவரை பொதுச் செயலாளராக இதுவரை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை' என்று ஆணையம் கூறியிருந்தது. இதற்குப் பிறகே, இரண்டு அணிகளும் ஒன்றிணைந்தன. தற்போது ஆஸ்பயர் ஸ்வாமிநாதன் தேர்தல் ஆணையத்திடம் பெற்றிருக்கும், 'பொதுச் செயலாளர் விவகாரம் செயல்பாட்டில் உள்ளது' என்கிற பதிலால், அ.தி.மு.க-வில் மாற்றம் உருவாகுமா, அல்லது குழப்பம் அதிகரிக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்.