Published:Updated:

எலெக்‌ஷன் ஜங்ஷன்

எலெக்‌ஷன் ஜங்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
எலெக்‌ஷன் ஜங்ஷன்

- குடவோலை குமரன்

எலெக்‌ஷன் ஜங்ஷன்

- குடவோலை குமரன்

Published:Updated:
எலெக்‌ஷன் ஜங்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
எலெக்‌ஷன் ஜங்ஷன்

‘‘ஏனுங்ணா... நீங்க கட்சிய ஒழுங்கா வளர்த்திருந்தா...’’ - கோவை கலாட்டா

‘கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தி.மு.க சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுவார்’ என்று வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே தி.மு.க-வில் பரபரக்கிறார்கள். இந்தநிலையில், கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சரான பொங்கலூர் பழனிசாமி, “ஜெயிச்சுட்டா நீங்கதான் சுற்றுச்சூழல்துறை அமைச்சர். நான் ஏற்கெனவே சுற்றுச்சூழல்துறை அமைச்சரா இருந்தவன். உங்களுக்கு சில ஐடியா தர்றேன்...’’ என்று கார்த்திகேய சிவசேனாபதியிடம் கூறியிருக்கிறார். அப்போது அருகே இருந்த மற்றொரு சீனியர், ‘‘ஏனுங்ணா... நீங்க இங்க கட்சிய ஒழுங்காவெச்சிருந்தா, வேலுமணியே வளர்ந்திருக்க மாட்டாரு. அப்பல்லாம் விட்டுப்போட்டு இப்ப வந்து சேனாபதிக்கு அட்வைஸ் பண்றீங்களா?’’ என்று நக்கலடித்திருக்கிறார். பதில் சொல்ல முடியாமல் பழனிசாமி கப்சிப் ஆகிவிட்டாராம்.

கார்த்திகேய சிவசேனாபதி - பொங்கலூர் பழனிசாமி
கார்த்திகேய சிவசேனாபதி - பொங்கலூர் பழனிசாமி

அறந்தாங்கியா, சுமைதாங்கியா? - கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்

தொகுதி ஒதுக்கீடு பட்டியல் வெளிவருவதற்கு முன்பே, ‘புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி இந்தமுறை என் மகனுக்குத்தான்’ என்று வெளிப்படையாகப் பேசிவந்தார், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி-யுமான திருநாவுக்கரசர். ‘அறந்தாங்கி தொகுதி காங்கிரஸுக்கு’ என்று செய்தி பரவிய சமயத்திலேயே, “காங்கிரஸை யெல்லாம் தூக்கிச் சுமக்க முடியாது” என்று தி.மு.க-வினர் கொந்தளித்துவிட்டார்கள். தொண்டர் ஒருவர் தீக்குளிக்கவும் முயன்றார். இப்படி, பிரச்னையைத் தூண்டிவிட்டதே தி.மு.க-வைச் சேர்ந்த ‘உதயமானவர்’தானாம். எதிர் முகாமான அ.தி.மு.க-விலும் சலசலப்புக்குப் பஞ்சமில்லை. அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜநாயகத்துக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், விரக்தியடைந்த ஒன்றியச் செயலாளர் பெரியசாமி சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்து அதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டார்.

எலெக்‌ஷன் ஜங்ஷன்

செக் மோசடிப் புகாரில் தென்காசி வேட்பாளர்!

அ.தி.மு.க-வில் தென்காசியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான செல்வ மோகன்தாஸ் பாண்டியனுக்கு மீண்டும் சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘‘செல்வ மோகன்தாஸ் பாண்டியன் என்னிடம் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கிவிட்டு, காலாவதியான செக் கொடுத்து மோசடி செய்துவிட்டார்’’ என்று மைதீன் பிச்சை என்பவர், தென்காசி எஸ்.பி-யிடம் புகார் செய்திருக்கிறார்.

எலெக்‌ஷன் ஜங்ஷன்

இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் செல்வ மோகன்தாஸ் பாண்டியனோ, ‘‘நான் கடன் வாங்கியது உண்மை. அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன். அவர் என் நண்பராக இருந்ததால், சில டாக்குமென்ட்டுகளை வைத்திருந்தார். இப்போது தி.மு.க-வினரின் தூண்டுதலால் என்மீது பொய்ப் புகார் கொடுத்திருக்கிறார். அதைச் சட்டப்படி சந்திப்பேன்’’ என்கிறார். குற்றாலம் ஃபேமஸ் புரோட்டா கணக்காக இரு தரப்பினரும் அடித்துக்கொள்வதால், வேட்பாளர் மாற்றப்பட்டு தங்களுக்கு சீட் கிடைத்துவிடாதா என்ற நப்பாசையில் காத்திருக்கிறார்கள் தென்காசியின் இலைக் கட்சி நிர்வாகிகள்!

திருஞானசம்பந்தம் - கோவிந்தராசு
திருஞானசம்பந்தம் - கோவிந்தராசு

கண்ணீர்விட்டுக் கதறினார்... சீட் வாங்கினார்!

தஞ்சை மாவட்டம், பேராவூரணி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் திருஞானசம்பந்தம். இந்தத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர், த.மா.கா-விலிருந்து விலகி, 2016-ம் ஆண்டு அ.தி.மு.க-வில் ஐக்கியமானார். பிறகு தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் பதவியும் கிடைத்தது. தற்போது, அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தைச் சந்தித்து, ‘‘உங்களை நம்பித்தான் அ.தி.மு.க-வுக்கு வந்தேன். சீட் கிடைக்கலைன்னா என் வீட்டுலகூட என்னை மதிக்க மாட்டாங்க. என்னை கைவிட்டுடாதீங்க’’ என்று கண்ணீர்விட்டுக் கதறினாராம். இதனால் மனமுருகிய வைத்தி, தலைமையிடம் பேசி அவருக்கு சீட் வாங்கிக் கொடுத்தார் என்கிறார்கள். இதற்காக வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே சிட்டிங் எம்.எல்.ஏ கோவிந்தராசுவை அழைத்த வைத்திலிங்கம், ‘‘தொகுதியைக் கேட்டு திருஞானசம்பந்தம் அடம்பிடிக்கிறாரு. அதனால, இம்முறை தொகுதியை அவருக்குத் தர்றோம். ஆட்சிக்கு வந்ததும் உங்களுக்குக் கட்சியில முக்கியத்துவம் தந்துடுறோம்’’ என்று இப்போதைக்குச் சமாதானப்படுத்திவிட்டாராம். ஆனாலும், உள்ளுக்குள் கொதிப்பில் இருக்கிறாராம் சீட்டை இழந்த கோவிந்தராசு!

எலெக்‌ஷன் ஜங்ஷன்

கோழி கூவும் முன்பே பட்டுவாடா! - தந்தைக்காகக் களமிறங்கும் ஜெயபிரதீப்!

கட்சி வேலைகளில் பிஸியாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், மூன்றாவது முறையாக போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்யும் பணி இருப்பதால், தனது தொகுதியைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை இளைய மகன் ஜெயபிரதீப்பிடம் கொடுத்திருக்கிறார். அதன்படி, போடி தொகுதியிலுள்ள கட்சி நிர்வாகிகளை தினமும் சந்திக்கும் ஜெயபிரதீப், ‘போடி தொகுதியில் எந்தெந்தப் பகுதிகளில் கட்சி பலவீனமாக இருக்கிறது... எங்கெல்லாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று பவர் பாயின்ட் பிரசன்டேஷன் கொடுத்துவருகிறார். கூடவே, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரவீந்திரநாத் குமாரை வெற்றிபெற வைப்பதற்காகக் கையாண்ட ‘டோர் டூ டோர்’ சிறப்பு கவனிப்பு விஷயங்களையும் கையிலெடுத்திருக்கிறாராம். குறிப்பாக, அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பே அரையிருட்டில் பட்டுவாடாக்களை முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism