Published:Updated:

`` ஃபேஸ்புக் வெறுப்பை விதைத்து லாபமடைகிறது!" - சோனியா காட்டம்

சோனியா காந்தி

'ஃபேஸ்புக் மூலம் மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கின்றனர். ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் இது தெரியும். அதைப் பயன்படுத்தி ஃபேஸ்புக் லாபம் பார்க்கிறது.' - சோனியா.

மக்களவையில் பூஜ்ய நேரத்தில் அல் ஜசீரா மற்றும் தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் ஆகியவற்றில் வெளியிடப்பட்ட அறிக்கையைக் குறிப்பிட்டுப் பேசிய சோனியா காந்தி, ``ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகப் பெரு நிறுவனங்களோடு ஆளுங்கட்சி இணைந்து செயல்படுகிறது. இதனால் ஃபேஸ்புக் மூலம் மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கின்றனர். ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் இது தெரியும். அதைப் பயன்படுத்தி ஃபேஸ்புக் லாபம் பார்க்கிறது. மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடும்போது, பா.ஜ.க-வின் தேர்தல் விளம்பரங்களுக்கு ஃபேஸ்புக் சலுகைகளை வழங்கியிருக்கிறது .

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்

அரசோடு இணைந்து சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் ஃபேஸ்புக்கின் செயல்பாடு ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. இது கட்சிகளுக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்டது. யார் ஆட்சியிலிருந்தாலும் நமது ஜனநாயகத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism