Published:Updated:

``நம் ஒற்றுமையைக் குலைக்க முயல்கிறார்கள்... எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்!" - பிரதமர் மோடி

நம் நாட்டின் ஒற்றுமையைக் குலைத்து, எதிரிகள் அதில் பயன்பெறப் பார்க்கிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

``நம் ஒற்றுமையைக் குலைக்க முயல்கிறார்கள்... எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்!" - பிரதமர் மோடி

நம் நாட்டின் ஒற்றுமையைக் குலைத்து, எதிரிகள் அதில் பயன்பெறப் பார்க்கிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:

குஜராத் மாநிலம், கெவாடியாவில் இன்று சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர், நேற்று குஜராத்தில் மோர்பி எனும் இடத்தில், கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் ஏராளமானோர் மரணமடைந்த துயரச் சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ``நான் தற்போது கெவாடியாவில் இருக்கிறேன். ஆனால், என்னுடைய மனது நேற்று மாலை குஜராத்தின் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் இறந்துபோனவர்களை நினைவுகூர்கிறது. இந்த மீட்புப்பணியில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. மத்திய அரசும் அனைத்து உதவிகளையும் செய்துவருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் அரசு தோளோடு தோள் நிற்கும்.

மோடி
மோடி

இந்தியாவின் ஒற்றுமையை உடைக்க எதிரிகள் முயன்றுவருகின்றனர். ஆனால் இது போன்ற முயற்சிகளுக்கு எதிராக நாடு உறுதியாக நிற்க வேண்டும். ஆயிரம் வருடங்களுக்கு முன்பும்கூட, இந்தியா அடிமைப்பட்டிருந்த காலத்தில் வெளிநாட்டவர்கள் நம் ஒற்றுமையைக் குலைக்க முயன்றிருக்கிறார்கள். இன்றும் எதிரிகள் நம் ஒற்றுமையைக் குலைக்க முயல்கிறார்கள். அதனால், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

நம் ஒற்றுமையைக் குலைத்து, எதிரிகள் அதில் பயன்பெறப் பார்க்கிறார்கள். அந்த எதிரி சக்திகள் நம் நாட்டு மக்களிடையே சாதி, மொழி என்னும் வேறுபாட்டை ஏற்படுத்தி பிரச்னை உண்டாக்கப் பார்க்கிறார்கள். வரலாற்றிலும் இத்தகைய விஷயங்கள் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன.

மோடி
மோடி

ஒற்றுமையை உடைக்க முயல்பவர்கள் நமது வெளிப்படையான எதிரிகள் மட்டுமல்ல... உள்ளே இருக்கும் யாரோ ஒருவர்கூட இருக்கலாம். நமக்குள்ளே அடிமை என்ற எண்ணத்தை ஏற்படுத்தி ஒற்றுமையைச் சிதைக்கிறார்கள் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். அத்தகைய எதிரிகளுக்கு நாம் இந்த நாட்டின் மக்களாக பதிலடி கொடுக்க வேண்டும்" என்றார்.