பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்தின் உறவினர் பூபேந்தர் சிங் ஹானி வீட்டிலிருந்து ரூ.3.9 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல், பிப்ரவரி 20-ம் தேதிக்கு நடைபெற உள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறையினர் பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கு நெருக்கமான உறவினர்கள் சட்டவிரோதமாக மணல் அள்ளியது மற்றும் மணல் குவாரிகள் நடத்துவது தொடர்பாக சுமார் 10 இடங்களில் நேற்று சோதனை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்தின் உறவினர் பூபேந்தர் சிங் ஹானி வீட்டிலிருந்து மேலும் ரூ.3.9 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனையில் இதுவரை ரூ.10.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
