Published:Updated:

மும்பை: எம்.எல்.ஏ-வின் ரூ.11 கோடி சொத்துகள் முடக்கம்... அமலாக்கத்துறை அதிரடி; சிவசேனா அதிர்ச்சி

பிரதாப் சர்நாயக்

மும்பையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சிவசேனா எம்.எல்.ஏ.வின் ரூ.11 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மும்பை: எம்.எல்.ஏ-வின் ரூ.11 கோடி சொத்துகள் முடக்கம்... அமலாக்கத்துறை அதிரடி; சிவசேனா அதிர்ச்சி

மும்பையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சிவசேனா எம்.எல்.ஏ.வின் ரூ.11 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Published:Updated:
பிரதாப் சர்நாயக்

மகாராஷ்டிராவில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சிவசேனா தலைவர்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மைத்துனரின் வீடுகளில் சோதனை நடத்தி சொத்துக்களை பறிமுதல் செய்தனர். தற்போது சிவசேனா எம்.எல்.ஏ.-வான பிரதாப் சர்நாயக் சொத்துக்களை முடக்கி இருக்கின்றனர். ரூ.11.35 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணமோசடி சட்டத்தின் கீழ் மும்பை அருகில் உள்ள தானேயில் இரண்டு வீடு மற்றும் நிலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞச்(என்எஸ்இ எல்) நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 3,242 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளனர். 2013-ம் ஆண்டு மும்பை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்சில் நடந்த மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்சில் வர்த்தகம் செய்த 13 ஆயிரம் பேரின் 5,600 கோடியை நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் இயக்குநர்கள் மோசடி செய்துவிட்டனர் என குற்றம்சாட்டப்பட்டது. நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தில் கடன் பெற்ற அஸ்தா குரூப் ரூ.242 கோடியை திரும்ப செலுத்தவில்லை. இதில் ரூ.21.74 கோடியை விஹாங் அஸ்தா ஹவுசிங நிறுவனத்திற்கு மாற்றி இருந்தனர்.

உத்தவ்தாக்கரே
உத்தவ்தாக்கரே

அந்த நிதியில் இருந்து விஹாங் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு ரூ.11.35 கோடி கோடி டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இருந்தது. இந்த இரண்டு நிறுவனமும் சிவசேனா எம்.எல்.ஏ.பிரதாப் சர்நாயக்கிற்கு சொந்தமானது ஆகும். அதன் அடிப்படையில் தான் தற்போது ரூ.11.34 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 10.50 கோடி யோகேஷ் தேஷ்முக் என்பவருக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. இதற்காக 10.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடரும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளின் நடவடிக்கைகளால் சிவசேனா தலைவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே, ``மத்திய விசாரணை ஏஜென்சிகள் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது” என்று தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism