Published:Updated:

அதிரடி நீக்கம், பதவி வழங்குவதில் எடப்பாடி, பன்னீர் போட்டா போட்டி... அதிமுக-வினர் மைண்ட் வாய்ஸ் என்ன?

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

அதிமுக-வில் இரு தரப்பும் மாறி மாறி கட்சியைவிட்டு நீக்குவதும், புதிய பொறுப்பாளர்களை அறிவிப்பதுமாக இருக்க, தொண்டர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை அறிய கட்சி வட்டாரத்தில் பேசினோம்.

அதிரடி நீக்கம், பதவி வழங்குவதில் எடப்பாடி, பன்னீர் போட்டா போட்டி... அதிமுக-வினர் மைண்ட் வாய்ஸ் என்ன?

அதிமுக-வில் இரு தரப்பும் மாறி மாறி கட்சியைவிட்டு நீக்குவதும், புதிய பொறுப்பாளர்களை அறிவிப்பதுமாக இருக்க, தொண்டர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை அறிய கட்சி வட்டாரத்தில் பேசினோம்.

Published:Updated:
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
`கட்சியிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டவர்கள் அவரவர் பொறுப்புகளில் தொடருவார்கள்` என மருத்துவமனையில் இருந்தபடியே அறிக்கை வெளியிட்ட ஓ.பி.எஸ்., கட்சியிலிருந்து பலரை மீண்டும் நீக்கி அடுத்தகட்ட ஆட்டத்துக்கு ரெடியாகியிருக்கிறார்.

அதிமுக-வின் திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சிறுனியம் பலராமன் தொடங்கி வழக்கறிஞர் பிரிவுத் தலைவரான சேதுராமன் வரை பத்துப் பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக கடந்த திங்கட்கிழமை அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். இந்தப் பட்டியலில், முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, எம்.சி.சம்பத் உள்ளிட்டவர்களும் அடக்கம். அதேநாளில், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தையும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டவர்களையும் அறிவித்திருக்கிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பாக, எடப்பாடி பழனிசாமி புதிய நிர்வாகிகளை அறிவித்தார். இப்போதும் ஓ.பி.எஸ்-ஸும் பதிலுக்கு புதிய நிர்வாகிகளை அறிவித்துவருகிறார். கட்சியில் இரு அணிகளாக இருக்கும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் மாறி மாறிக் கட்சியைவிட்டு நீக்குவதும், புதிய பொறுப்புகளை அறிவிப்பதும் தொண்டர்களை என்ன மாதிரியான மனநிலையில் தள்ளியிருக்கிறது?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பல்வேறு களேபரங்களுக்குப் பிறகு கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. அந்தக் கூட்டத்திலேயே, கட்சியின் கட்டுப்பாட்டுக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஓ.பி.எஸ் வகித்துவந்த பொருளாளர் பொறுப்புக்கு திண்டுக்கல் சீனிவாசன் அப்போதே அறிவிக்கப்பட்டார். அதற்கடுத்தடுத்த நாள்களில், கட்சியின் பல புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டு, அவற்றுக்கான அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி, கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், தலைமை நிலையச் செயலாளராக வேலுமணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதேபோல, தற்போது அவைத்தலைவராக இருக்கும் தமிழ்மகன் உசேன் வகித்துவந்த அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளராக மூத்த தலைவர் பொன்னையனும், அமைப்புச் செயலாளர்களாக, செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், பெஞ்சமின் உள்ளிட்ட 11 பேரும் அறிவிக்கப்பட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேபோல, கட்சியின் சட்டமன்றத் துணைத் தலைவராக பன்னீர் வகித்த பதவிக்கு ஆர்.பி.உதயக்குமாரும், துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியன் வகித்துவந்த பதவிக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் அறிவித்தது எடப்பாடி தரப்பு. இது ஒருபுறமிருக்க, பொதுக்குழுக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோதே, கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமியையும் கே.பி.முனுசாமியையும் நீக்குவதாக ஓ.பி.எஸ் பதிலடி கொடுத்தார். தொடர்ந்து இரு தரப்பிலும் மாறி மாறிக் கட்சியைவிட்டு நீக்கும் படலம் அரங்கேறியது. இதுவரைக்கும் ஓ.பி.எஸ் 76 பேரையும், இ.பி.எஸ் 44 பேரையும் கட்சியிலிருந்து நீக்கியிருக்கின்றனர்.

இது தவிர, சென்னை தொடங்கி ராமநாதபுரம் வரைக்கும் 14 மாவட்டங்களுக்குச் செயலாளர்களையும், தலைமைக் கழக நிர்வாகிகளையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார் ஓ.பி.எஸ். நேற்று திருப்பூர், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கான செயலாளர்களையும், புதுச்சேரி மாநிலச் செயலாளரையும், வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் மற்றும் செயலாளரையும் அறிவித்திருக்கிறார்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

இப்படி இரு தரப்பும் மாறி மாறி கட்சியைவிட்டு நீக்குவதும், புதிய பொறுப்பாளர்களை அறிவிப்பதுமாக இருக்க, தொண்டர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை அறிய கட்சி வட்டாரத்தில் பேசினோம்.

``தலைவர் உருவாக்கிய கட்சி, அம்மா வளர்த்தெடுத்த கட்சி ஒன்றாக, வலுவாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் ஒற்றைத் தலைமைதான் தேவை என்கிற முடிவுக்கு வந்தார்கள். ஆனால், அதை முறைப்படி செய்திருக்க வேண்டும். அதற்கான விவாதம் எழுந்துகொண்டிருந்தபோதே பலரும் எடப்பாடியாருக்கு ஆதரவாகச் செயல்பட்டது ஓ.பி.எஸ்-ஸுக்கு மிகப்பெரிய அதிருப்தியை உண்டாக்கிவிட்டது. அதுமட்டுமல்ல, பொதுக்குழுவில் ஓ.பி.எஸ்-ஸை நடத்தியவிதமும் சரியல்ல. அதுவரைக்கும் அவர்மீது அனுதாபம் இருந்தது உண்மைதான். ஆனால், தலைமைக் கழகத்தில் அவர் நடந்துகொண்டவிதம் பெரும்பாலான தொண்டர்களுக்கு அவர்மீது ஓர் அதிருப்தியை உண்டாக்கிவிட்டது.

அதிமுக
அதிமுக

இப்போதும் உட்கட்சிப் பிரச்னையை இங்கேயே பேசி முடிக்காமல், டெல்லியை வைத்து டீல் செய்வது அவர்மீதான மரியாதையைக் குறைத்துவிட்டது. தன்னுடைய அரசியல் செல்வாக்கைத் தக்கவைக்க, தொண்டர்களிடம் அவர் ஆதரவு திரட்டலாம். தனக்கான நியாயத்தைக் கேட்கலாம். ஆனால், அவரின் நடவடிக்கைகள் அப்படி இல்லை. அதேவேளையில் இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை, அவரும் கட்சிக்காக உழைத்தவர், அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர்தான். ஒருதாய்ப் பிள்ளைகளாக கட்சிக்குள் வந்தால் அவருக்கு உரிய மரியாதை வழங்கப்படும். பிரதமர் வருவதையொட்டி இருவரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதாகச் சொல்கிறார்கள். இருவரும் இணைந்தால் மிக்க மகிழ்ச்சி. இல்லாவிட்டால், இவர் ஒருபக்கம் செயல்பட, அவர் ஒருபக்கம் செயல்பட கழகம்தான் வலிமையிழந்து போகும். திமுக-வை வலுவாக எதிர்க்கவேண்டிய காலகட்டத்தில், தங்களுக்குள் அடித்துக்கொள்வது அம்மாவின் ஆன்மாவுக்குச் செய்யும் துரோகமாகும்'' என்றார்கள்.