Published:Updated:
`நிர்ணயிக்காத’ நிர்மலா, `நிர்பந்திக்காத’ ஜி.கே.வாசன், `பிறவிப் பயனடைந்த’ எடப்பாடி!

அரசியல் தலைவர்களின் சமீபத்திய நச்சு ஸ்டேட்மென்ட்ஸ்...
``பா.ஜ.க ஆட்சிக் கவிழ்ப்பு புதிதல்ல; கோவா, மத்தியப்பிரதேசம் என உதாரணங்கள் உள்ளன’’ - நாராயணசாமி

``தி.மு.க., அ.திமு.க என்னிடம் நேரடியாகப் பேசவில்லை. தூதுவிட்டதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.’’ - கமல்ஹாசன், ம.நீ.ம தலைவர்
``சட்டசபைத் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க-வில் விருப்ப மனு விநியோகம் கிடையாது.’’ - எல்.முருகன்

``பசுமாட்டுக்குக் கொடுக்கும் மரியாதைகூட தமிழர்களுக்குக் கிடைப்பதில்லை.’’ - கமல்ஹாசன், ம.நீ.ம தலைவர்
``பெட்ரோல், டீசல் விலையை நாங்கள் நிர்ணயிப்பது இல்லை.'' - நிர்மலா சீதாராமன்

``நான் ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுடன் அரசியல் பயணத்தை மேற்கொள்வதாக அவதூறுகள் பரப்பப்பட்டன. உண்மையில் நான் அவர்களுடன் போனில்கூட பேசியதில்லை.'' - சகாயம்
``அ.தி.மு.க கூட்டணியில், அதிக இடங்களைக் கேட்டு நிர்பந்திக்க மாட்டோம்.'' - ஜி.கே.வாசன்

``காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்ததில் வாழ்நாள் பிறவிப்பயனை அடைந்ததாக மகிழ்கிறேன்.'' - முதல்வர் பழனிசாமி
``மக்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் ஓடோடி வரக்கூடிய பழனிசாமியாக இருப்பேன்.'' - முதல்வர் பழனிசாமி

``உ.பி-யோ, பீகாரோ இல்லை. இது தமிழ்நாடு... வாக்குப் பெட்டியில் கைவைக்க முடியாது.’' - துரைமுருகன், தி.மு.க பொதுச்செயலாளர்.

``நாட்டில் மு.க.ஸ்டாலின் ஒருவர்தான் நிம்மதியாக இல்லை.'' - அமைச்சர் கடம்பூர் ராஜூ