Published:Updated:

`கவனமா பேசுங்க!' - ராஜேந்திர பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்ன ஒரு கருத்தினால், அந்தக் கட்சியினர் கொந்தளித்திருக்கிறார்கள்.

Rajendra Balaji
Rajendra Balaji ( ஆர்.எம்.முத்துராஜ் )

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபகாலமாக அ.தி.மு.க-வின் ஊதுகுழலாக, அவர் சொல்லும் பல கருத்துகள் சமூக வலைதளங்களில் விமர்சனத்தை சந்தித்துவருகிறது. குறிப்பாக, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பற்றி அவர் சொன்ன ஒரு கருத்தினால், கொந்தளித்த அந்தக் கட்சியினர் ராஜேந்திர பாலாஜிக்கு மனநல பரிசோதனை நடத்த வேண்டும் என்று கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் மனு கொடுத்துள்ளனர்.

Rajendra Balaji
Rajendra Balaji
ஆர்.எம்.முத்துராஜ்

ராஜேந்திர பாலாஜியின் கருத்துகள் அவருடைய கருத்துகளா... அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ கருத்துகளா என்கிற குழப்பம் அந்தக் கட்சியினரிடமே இன்னும் உள்ளது. அவரின் சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதால், அ.தி.மு.க மேலிடமும் இவருடைய விஷயத்தில் கொஞ்சம் கவனத்துடன் கையாளவே முடிவுசெய்துள்ளது. `மோடி தமிழகத்தின் டாடி' என்று பி.ஜே.பி-யினர்கூட ஆச்சர்யப்படும் அளவிற்கு பிரதமர் மோடியைப் புகழந்து தள்ளினார். தொடர்ந்து, பி.ஜே.பி-க்கு ஆதரவான கருத்துகளைப் பொதுமேடையிலும் பேசிவருகிறார். அ.தி.மு.க-வின் நிலைப்பாடு பி.ஜே.பி-க்கு நெருக்கமான நிலைப்பாடு என்கிற கருத்தாக்கம் இவரின் பேச்சுகளால் வலுப்பெற்றுவருகிறது. இந்நிலையில், ``இத்தாலியில் பிறந்தவர் ராகுல் காந்தி. அவருக்கு இந்தியர்களின் மீது என்ன அக்கறை இருக்கும்?” என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கருத்து தெரிவித்திருந்தார்.

`சத்துணவு வேலைக்குப் போய்விடுங்கள்!' - அதிகாரிகளைத் திட்டி சர்ச்சையில் சிக்கிய ராஜேந்திர பாலாஜி

இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில், ``அ.தி.மு.க-வை உருவாக்கிய எம்.ஜி.ஆர் பிறந்தது தமிழகத்திலா? ஜெயலலிதா பிறந்தது தமிழகத்திலா?” என்று அடுக்கடுக்கான எதிர்கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி ராஜேந்திர பாலாஜி விஷயத்தில் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம். ``ஆரம்பத்தில் சில கருத்துகளை ராஜேந்திர பாலாஜிமூலம் சொல்லவைத்தது எடப்பாடிதான். அதற்குக் காரணம், எந்தக் கருத்துகளையும் எதார்த்தமாகச் சொல்லிவிடுவார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

அவர் சொல்லும் பாங்கு ஊடகங்களில் எளிதாகச் சென்றடைந்துவிடுகிறது என்று எடப்பாடி கணக்கு போட்டார். ஆனால், பி.ஜே.பி-க்கு ஆதரவாக அவரின் கருத்துகள் சில நேரங்களில் அ.தி.மு.க-விற்கே சங்கடத்தைக் கொடுத்துள்ளது. கட்சி என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது, முதல்வர் இதுகுறித்து என்ன முடிவு எடுப்பார் என்கிற எந்த முன்யோசனையும் இல்லாமல் சில கருத்துகளை, இவர் பேசிவிடுவதால் பல நேரங்களில் முதல்வருக்கும் சிக்கலாகிவிடுகிறது.

`திராவிட இயக்கத்தில் மலர்ந்த ஆன்மிக மலர்தான் அ.தி.மு.க!'- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

தற்போது தொடர்ந்து அனைத்து தொலைக்காட்சிகளும் ராஜேந்திர பாலாஜியைச் சுற்றிவருகிறார்கள். இதில், ஏதாவது ஏடாகூடமான கருத்துகளைச் சொல்லிவிடுவாரோ என்று முதல்வர் அச்சப்படுகிறார். இதனால் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ராஜேந்திர பாலாஜியிடம் முதல்வரே தொடர்கொண்டு பேசியுள்ளார். `உங்கள் பேச்சு நன்றாக இருக்கிறது.

Edappadi palanisamy
Edappadi palanisamy

ஆனால், மீடியாவில் பேசும்போது வார்த்தைகள் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், நம் விரலைவைத்து நம் கண்ணையே குத்திவிடுவார்கள். அதனால், கொஞ்சம் நீங்கள் அமைதியாக இருங்கள்' என்று நாசுக்காகச் சொல்லியுள்ளார். தனிப்பட்ட முறையில் பேட்டி கேட்டால் ராஜேந்திர பாலாஜியைக் கொஞ்சம் நாள்கள் தவிர்த்திருக்க சொல்லியுள்ளது தலைமை” என்கிறார்கள்.