Published:Updated:

``ஒன்றிணைய ஒத்துவரவில்லை என்றால், எடப்பாடி தனிமைப்படுத்தப்படுவார்” - வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

``அனைவரது ஒற்றுமைக்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துவரவில்லை என்றால், அவர் தனிமைப்படுத்தப்படுவார். அது கூடிய சீக்கிரத்தில் நடக்கும்.” - வைத்திலிங்கம்

``ஒன்றிணைய ஒத்துவரவில்லை என்றால், எடப்பாடி தனிமைப்படுத்தப்படுவார்” - வைத்திலிங்கம்

``அனைவரது ஒற்றுமைக்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துவரவில்லை என்றால், அவர் தனிமைப்படுத்தப்படுவார். அது கூடிய சீக்கிரத்தில் நடக்கும்.” - வைத்திலிங்கம்

Published:Updated:
வைத்திலிங்கம்

புதுக்கோட்டை நெல்லுமண்டித் தெருவில், அதிமுக ஓ.பி.எஸ் அணியின் வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜசேகரன் மாவட்ட அலுவலகம் ஒன்றைக் கட்டியிருக்கிறார். அதை இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் திறந்துவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``அ.தி.மு.க தமிழகத்தில் நூற்றாண்டுக்காலம் இருக்கும் என்று ஜெயலலிதா கூறினார். அதை நோக்கித்தான் அ.தி.மு.க பயணிக்கிறது. ஓபிஎஸ்-ஸின் கருத்து, ஒன்றுபட்டால், உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கினால், அனைவர்க்கும் தாழ்வு. இந்தக் கருத்தை லட்சக்கணக்கான தொண்டர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அ.தி.மு.க விவகாரத்தில் பாஜக தலையிடுவதாகத் தெரியவில்லை.

``ஒன்றிணைய ஒத்துவரவில்லை என்றால், எடப்பாடி தனிமைப்படுத்தப்படுவார்” - வைத்திலிங்கம்

நாங்கள் விரும்புவதெல்லாம் ஜெயலலிதாவின் எண்ணத்தின்படியும், எம்.ஜி.ஆரின் எண்ணத்தின்படியும் அனைவரும் ஒற்றுமையாகச் சேர்ந்து செயல்பட்டு, கட்சியை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வேண்டும் என்பதே. ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி., எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்ற பண்ருட்டியார், சைதை துரைசாமி, ஏ.சி.சண்முகம் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமும்கூட. `ஒன்றிணைய மாட்டோம்’ எனச் சில காரணங்களால் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து, தனது கருத்தைக் கூறிவருகிறார். சில முன்னாள் அமைச்சர்கள், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அனைவரது ஒற்றுமைக்கும் எடப்பாடி பழனிசாமி ஒத்துவரவில்லை என்றால், அவர் தனிமைப்படுத்தப்படுவார். அது கூடிய சீக்கிரத்தில் நடக்கும்.

ஆளுநர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவருக்கு என்ன அதிகாரமோ, அதன்படிதான் செயல்படுகிறார். அப்படி நடக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தலைமையில் இரட்டை இலைச் சின்னம் கட்டாயம் எங்களுக்குக் கிடைக்கும். தி.மு.க எங்களை இயக்குவதாகப் பரவலாக பேச்சு அடிபடுகிறது. நிச்சயமாக எங்களை திமுக இயக்கவில்லை, அதற்கு நாங்கள் ஆட்பட மாட்டோம்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது, எய்ம்ஸ் உள்ளிட்ட பெரிய பெரிய மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் வந்தார்கள். ஆறுமுகசாமி ஆணையம் சொன்னதுதான் உண்மை என்று கூறிவிட முடியாது. அது பிற்காலத்தில் மாறலாம். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆணையம் கருத்து சொல்லியிருக்கிறது.

``ஒன்றிணைய ஒத்துவரவில்லை என்றால், எடப்பாடி தனிமைப்படுத்தப்படுவார்” - வைத்திலிங்கம்

அதற்கு, அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே ஓ.பி.எஸ் கூறியிருக்கிறார். இதில் உண்மையான நிலவரம் என்னவென்றால் எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்துள்ளனர். அவர்களைவிட இந்தியாவில், சிறந்த மருத்துவர்கள் கிடையாது.‌ அவர்கள் கருத்தைக் கேட்டால்தான், என்ன உண்மை என்று தெரியும். கூடிய சீக்கிரம் பொதுக்குழு இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என்று ஓ.பி.எஸ் கூறியிருக்கிறார். அது விரைவிலேயே நடக்கும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பா.ஜ.க தலைமையில்தான், அ.தி.மு.க தேர்தலைச் சந்திக்கும். 40 இடங்களிலும் அ.தி.மு.க வெற்றிபெறும்" என்றார்.