Published:Updated:

``அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு... உங்கள் ஒருங்கிணைப்பாளர் கடிதம் செல்லத்தக்கதல்ல”- இ.பி.எஸ் கடிதம்

ஓ.பி.எஸ்-ஸுக்கு எடப்பாடி கடிதம்

`அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் நீங்கள் எழுதிய கடிதம் செல்லத்தக்கல்ல' என தமிழ்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

``அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு... உங்கள் ஒருங்கிணைப்பாளர் கடிதம் செல்லத்தக்கதல்ல”- இ.பி.எஸ் கடிதம்

`அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் நீங்கள் எழுதிய கடிதம் செல்லத்தக்கல்ல' என தமிழ்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ஓ.பி.எஸ்-ஸுக்கு எடப்பாடி கடிதம்

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணி இடையே மிகப்பெரிய அளவில் கருத்து மோதல் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், `` உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்க கையெழுத்து போட நான் தயார்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இந்தக் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்ததாகத் தகவல்கள் வெளியாகின.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு

இந்த நிலையில், இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருக்கிறார். `அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு வணக்கம்' எனத் தொடங்கும் அந்தக் கடிதத்தில், ``தங்களின் 29.06.2022-ம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். பின்னர், திரு.மகாலிங்கம் அவர்கள் வழியாகப் பெறப்பட்டது.

கடந்த 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில், 1.12.2021 அன்று நடைபெற்ற கழகச் செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்தச் சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டன. எனவே, கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியிருக்கும் கடிதம் செல்லத்தக்கதல்ல.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு... உங்கள் ஒருங்கிணைப்பாளர் கடிதம் செல்லத்தக்கதல்ல”- இ.பி.எஸ் கடிதம்

மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்குக் கடைசி நாள் 27.06.2022 அன்று முடிவுற்ற நிலையில், இத்தனை நாள்கள் பொறுத்திருந்து, கழகத்தின் வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையிலும், 27.06.2022 அன்று கூட்டப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு தாங்கள் உட்பட அனைவருக்கும் முறையாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மொத்தம் உள்ள 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர். நான்கு பேர் உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்திருந்தனர். தாங்கள் அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்த நிலையில், தற்போதைய தங்களின் இந்தக் கடிதம் ஏற்படையதாக இல்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அ.தி.மு.க பொதுக்குழு
அ.தி.மு.க பொதுக்குழு

அதேபோல், நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த, கழகத்தின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தாங்கள், ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும், நீதிமன்றம் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்படையதாக இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' எனத் தெரிவித்திருக்கிறார்.