Published:Updated:

சட்டப்பேரவை அதிமுக விவகாரம்: ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து இபிஎஸ் கடிதம்!

அதிமுக - பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடைவிதித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைச் சுட்டிக்காட்டி ஓ.பி.எஸ் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

சட்டப்பேரவை அதிமுக விவகாரம்: ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து இபிஎஸ் கடிதம்!

பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடைவிதித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைச் சுட்டிக்காட்டி ஓ.பி.எஸ் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

Published:Updated:
அதிமுக - பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் அ.தி.மு.க-வில் உட்கட்சிப்பூசல் நாளுக்கு நாள் பூதாகாரமாகி வருகிறது. இந்த நிலையில், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடைவிதித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைச் சுட்டிக்காட்டி ஓ.பி.எஸ் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், அ.தி.மு-வின் ஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்தாலோசிக்கவேண்டும் என ஓ.பி.எஸ் குறிப்பிட்டிருக்கிறார். ஒற்றைத் தலைமை பிரச்னை தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அ.தி.மு.க சார்பாக சட்டமன்றக் குழுக்களை மாற்றுவது தொடர்பாக மனுக்கள் வந்தால் நிராகரிக்க வேண்டும் என கடந்த ஜூலை மாதம் ஓ.பி.எஸ் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அப்பாவு
அப்பாவு

இந்த நிலையில், இ.பி.எஸ் தரப்பு ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தது. இரு தரப்பு கடிதங்களும் பரிசீலனையில் இருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இரண்டாவது கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டம் 17-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், ஓ.பி.எஸ்ஸைத் தொடர்ந்து இ.பி.எஸ் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற அடிப்படையில் ஆர்.பி.உதயகுமாரை அலுவல் ஆய்வு குழுவில் அனுமதிக்க வேண்டும் என சட்டப்பேரவைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.