Published:Updated:

``காங்கிரஸையும் கமல்ஹாசனையும் யாரும் பிரிக்க முடியாது!" - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

கமல்ஹாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்திப்பு

``காங்கிரஸையும் கமல்ஹாசனையும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது என்பதுதான் உண்மை. இருந்தாலும் அவர் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று நாங்கள் கேட்டோம்." - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

``காங்கிரஸையும் கமல்ஹாசனையும் யாரும் பிரிக்க முடியாது!" - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

``காங்கிரஸையும் கமல்ஹாசனையும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது என்பதுதான் உண்மை. இருந்தாலும் அவர் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று நாங்கள் கேட்டோம்." - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Published:Updated:
கமல்ஹாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்திப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நேற்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்துவருகிறார்.

கமல்ஹாசன்,  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்திப்பு
கமல்ஹாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்திப்பு

அந்த வரிசையில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டு காங்கிரஸுக்கு ஆதரவாக நின்ற, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று சந்தித்தார். ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ``தி.மு.க கூட்டணியில் அவர் சேர வேண்டும் என்று எங்களுடைய விருப்பத்தை அவரிடம் சொன்னேன்.

நிர்வாகிகளோடு கலந்து பேசி முடிவெடுப்பதாகச் சொன்னார். கமல்ஹாசனுடைய ரத்தம் தேசியமும், காங்கிரஸும் கலந்த ஒன்று என்று எல்லோருக்கும் தெரியும். அவருடைய தந்தையார் காங்கிரஸ் கட்சியில் தியாகியாக இருந்தவர். ஆகவே, காங்கிரஸையும், கமல்ஹாசனையும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது என்பதுதான் உண்மை. இருந்தாலும் அவர் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று நாங்கள் கேட்டோம். ஒரு நல்ல முடிவை இன்று அவர் அறிவிப்பார். அறிவிப்பதோடு மட்டுமல்லாமல் தேர்தலில் ஈரோட்டில் வந்து தி.மு.க கூட்டணிக்கு பிரசாரம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தையும் சொல்லியிருக்கிறோம். கண்டிப்பாக அதைச் செய்வார் என்று முழுமையாக நம்புகிறேன்.

கமல்ஹாசன்,  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்திப்பு
கமல்ஹாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்திப்பு

கமல்ஹாசன் கை கொடுப்பதோடு மட்டுமல்ல `கை'க்கும் வாக்கு சேகரிப்பார் என்று நான் முழுமையாக நம்புகிறேன். என்னுடைய மனதில் அவர் உத்தரவாதம் தந்துவிட்டதாகத்தான் நான் நினைக்கிறேன். நாங்கள் ஜனநாயக முறைப்படி எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறோம். ஆனால், பா.ஜ.க-வைப் பொறுத்தவரையில், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளைப் பதவியிழக்கச் செய்து, பணத்தால் அதிகாரத்தை வைத்து மிரட்டி ஆள் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் கொள்கைரீதியாக ஆட்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். என்னைப் பொறுத்தவரையில், கமல்ஹாசன் மதச்சார்பின்மையில் நம்பிக்கைகொண்டவர் என்பது எனக்குத் தெரியும். சாதி வித்தியாசங்கள் அவருக்குக் கிடையாது என்பதும் எனக்குத் தெரியும். ஆகவே, இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு அவர் ஆதரவு நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

அ.தி.மு.க இரண்டாக உடையவில்லை, நாலாக உடைந்திருக்கிறது. கண்டிப்பாக அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையில், அந்த நாலு பேரும் சேர்ந்து பா.ஜ.க-வை ஆதரிக்கக்கூடிய நிலையை, பா.ஜ.க தன்னுடைய ஆட்சி அதிகாரத்தால் செய்யும் என்று நினைக்கிறேன். நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். பிரிந்த நாலு அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வுக்கு ஜால்ரா அடிக்கும் கட்சியாக இருக்கின்றன. இந்த நான்கு கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவு தருவதற்கான வாய்ப்புகள் அதிகம், அதை நான் வரவேற்கிறேன்" என்றார்.