Published:Updated:

இடைத்தேர்தல் மல்லுக்கட்டு: எடப்பாடி Vs பன்னீர்... `இரட்டை இலை’ சின்னம் யாருக்கு?!

எடப்பாடி, பன்னீர் ( விகடன் )

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வு-க்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்குமா, கிடைக்காதா... அப்படிக் கிடைத்தால் யாருக்குக் கிடைக்கும் என்பதே அரசியல் களத்தில் பெரும் கேள்வியாக இருக்கிறது.

இடைத்தேர்தல் மல்லுக்கட்டு: எடப்பாடி Vs பன்னீர்... `இரட்டை இலை’ சின்னம் யாருக்கு?!

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வு-க்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்குமா, கிடைக்காதா... அப்படிக் கிடைத்தால் யாருக்குக் கிடைக்கும் என்பதே அரசியல் களத்தில் பெரும் கேள்வியாக இருக்கிறது.

Published:Updated:
எடப்பாடி, பன்னீர் ( விகடன் )

ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற ஈ.வெ.ரா திருமகன் உடல்நலக்குறைவால் சமீபத்தில் மரணமடைந்தார். இதனால் காலியான ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு, பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன்படி, இடைத்தேர்தலில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா-வுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க-வே நேரடியாகக் களமிறங்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இடைத்தேர்தல் மல்லுக்கட்டு: எடப்பாடி Vs பன்னீர்... `இரட்டை இலை’ சின்னம் யாருக்கு?!

இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தாங்கள் போட்டியிட இருப்பதாகவும், பாஜக போட்டியிட்டால் தாங்கள் விட்டுத்தருவோம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க கூட்டணியிலுள்ள கட்சித் தலைவர்களைத் தேடித் தேடிச் சந்தித்துவருகிறார் ஓ.பி.எஸ்.

இடைத்தேர்தல் மல்லுக்கட்டு: எடப்பாடி Vs பன்னீர்... `இரட்டை இலை’ சின்னம் யாருக்கு?!

அதேபோல, எடப்பாடி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்துவருகின்றனர்.

இது குறித்து எடப்பாடி தரப்பிலுள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் பேசினோம். ``ஈரோடு இடைத்தேர்தலில் பன்னீர்செல்வத்தால் நிச்சயம் வேட்பாளரை நிறுத்த முடியாது. இது அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். எனவேதான், குட்டையைக் குழப்ப, பா.ஜ.க-வை துணைக்கு அழைக்கிறார். அதேபோல, கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த எல்லா தலைவர்களையும் சந்தித்துப் பேசுகிறார். `அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக நான் தொடர்கிறேன். இரட்டை இலைச் சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன்’ என்று விவரம் புரியாமல் பேசுகிறார். அவர் சொல்வதை ஏற்றுக்கொண்டாலும், ஏ மற்றும் பி படிவத்தில் இரண்டு பேரும்தானே கையெழுத்து போட வேண்டும்... உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் வரலாம்.

எடப்பாடி, பன்னீர்!
எடப்பாடி, பன்னீர்!

அதன்படி, பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட ஓ.பி.எஸ் நீக்கம் உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதன்படி, சின்னத்துக்கு ஓ.பி.எஸ் உரிமை கொண்டாட முடியாது. ஒருவேளை பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வருவது தாமதமானாலும், சின்னம் எடப்பாடி தரப்புக்கே கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது, `ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும்’ என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருக்கிறது. இதை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பு மேல்முறையீடு செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எந்த இடைக்காலத் தடையையும் விதிக்கவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

சின்னத்தைப் பொறுத்தவரை பெரும்பான்மை இருக்கும் பக்கத்துக்குத்தான் ஒதுக்கப்படும். அதன்படி, எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவின்படி எடப்பாடிக்கு சின்னம் கிடைக்கும்" என்றார்கள்.

இது குறித்து பன்னீர்செல்வம் வட்டாரத்தில் விசாரித்தோம்.

``ஈரோடு கிழக்குத் தொகுதி கடந்த முறை த.மா.கா-வுக்கு ஒதுக்கப்பட்டது. கூட்டணி தர்மப்படி, அந்த இடத்தை மீண்டும் அவர்களுக்கே வழங்கியிருக்க வேண்டும். ஆனால், எடப்பாடி அதைச் செய்யவில்லை. த.மா.கா தலைமையை மிரட்டிப் பணியவைத்திருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அதன்படி, எங்கள் தரப்பில் வேட்பாளரை நிறுத்தவிருக்கிறோம். அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி ராஜினாமா செய்துவிட்டதால், சின்னத்துக்கான படிவத்தில் அவரது கையெழுத்து தேவையில்லை.

பன்னீர்
பன்னீர்

முறைகேடாக பொதுச்செயலாளர் ஆன எடப்பாடியின் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்பதால், எடப்பாடி தரப்புக்கு சின்னம் கிடைக்க வாய்ப்பே இல்லை. இதனால், `ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சின்னத்தை வழங்க வேண்டும்’ என்று தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பவிருக்கிறோம். குறிப்பாக, எடப்பாடியின் சர்வாதிகாரப் போக்கை டெல்லி மேலிடம் விரும்பவில்லை. அதனால்தான், இடைத்தேர்தலில் களமிறங்கும் முடிவுக்கு பாஜக வந்திருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அதற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது... கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எங்களுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால்தான், அவர்களைத் தேடிப் போய்ச் சந்திக்கிறோம். ஓரிரு நாள்களில் நல்ல முடிவு தெரிந்துவிடும்" என்கிறார்கள்.

இந்தக் குழப்பங்களுக்கு விடை தெரிவதுதான் எப்போது... பொறுத்திருந்து பார்ப்போம்!