Published:Updated:

``தீவிரவாதி கசாப் கூட நியாயமாக விசாரிக்கப்பட்டான்" - சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி அமைச்சர்

சிறையில் ஜெயினுக்கு மசாஜ்

``பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் கூட நியாயமாக விசாரிக்கப்பட்டான்” என்று டெல்லி சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் புகார் செய்துள்ளார்.

``தீவிரவாதி கசாப் கூட நியாயமாக விசாரிக்கப்பட்டான்" - சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி அமைச்சர்

``பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் கூட நியாயமாக விசாரிக்கப்பட்டான்” என்று டெல்லி சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் புகார் செய்துள்ளார்.

Published:Updated:
சிறையில் ஜெயினுக்கு மசாஜ்

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் ஜெயினுக்கு அதிகப்படியான சலுகைகள் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறையில் ஜெயினுக்கு மசாஜ் செய்வது போன்ற வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ திட்டமிட்டு அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் வெளியிடப்பட்டது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது. டெல்லி மாநகராட்சிக்கு தேர்தல் அறிவிக்கபட்டுள்ளது. இத்தேர்தலில் பாஜகவிற்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அதனால் முதலில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டது என சொல்லப்பட்டது.

``தீவிரவாதி கசாப் கூட நியாயமாக விசாரிக்கப்பட்டான்" - சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி அமைச்சர்

தற்போது அமைச்சருக்கு மசாஜ் செய்வது போன்ற வீடியோ வெளியாகி இருக்கிறது. இது குறித்து அமைச்சர் ஜெயின் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ``பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் கூட நேர்மையாகவும், நியாயமாகவும் விசாரிக்கப்பட்டான். அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு கொடுக்கும் தகவல்களை திட்டமிட்டு மீடியாவிற்கு கசியவிடுகின்றனர். அவர்களின் செயல் மூலம் ஒவ்வொரு நிமிடமும் நான் அவமானப்படுத்தப்படுகிறேன். சலுகையைப்பற்றி பேசுகிறார்கள். சிறையில் நான் 28 கிலோ எடை குறைந்துவிட்டேன். இதுதான் சிறையில் கொடுக்கப்படும் சலுகையா? சரியாக சாப்பாடுகூட கொடுக்கப்படுவதில்லை” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை அமைச்சர் ஜெயின் தனது வழக்கறிஞர் மூலம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். அமலாக்கப்பிரிவு சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர் சோயப் உசேன் இது குறித்து கூறுகையில், ``நாங்கள் எந்த வீடியோவையும் கசியவிடவில்லை. மசாஜ் தொடர்பான வீடியோ அமைச்சரின் வழக்கறிஞர்களுக்கும் வழங்கப்பட்டது” என்று தெரிவித்தார். திகார் சிறையில் அமைச்சர் ஜெயின் இருந்த பகுதியில் பாதுகாப்புக்கு இருந்த 28 அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே சுகேஷ் சந்திரசேகருக்கு திகார் சிறையில் அதிகப்படியான சலுகைகள் வழங்கப்பட்டபோதும் ஏராளமான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடததக்கது.