Published:Updated:

``வாரன்ட் ஏதுமில்லை, ஆனாலும் காங்கிரஸாரை இப்படி நடத்தியிருக்கிறார்கள்" - ப.சிதம்பரம் கண்டனம்

ப.சிதம்பரம் ( P.Chidambaram )

``போலீஸாரிடம் வாரன்ட் எதுவுமில்லை, ஆனால் அவர்கள் அலுவலகத்துக்குள்ளே நுழைந்து எம்.பி-க்கள் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை இழுத்து சாலையில் வீசியுள்ளனர்." - ப.சிதம்பரம்

``வாரன்ட் ஏதுமில்லை, ஆனாலும் காங்கிரஸாரை இப்படி நடத்தியிருக்கிறார்கள்" - ப.சிதம்பரம் கண்டனம்

``போலீஸாரிடம் வாரன்ட் எதுவுமில்லை, ஆனால் அவர்கள் அலுவலகத்துக்குள்ளே நுழைந்து எம்.பி-க்கள் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை இழுத்து சாலையில் வீசியுள்ளனர்." - ப.சிதம்பரம்

Published:Updated:
ப.சிதம்பரம் ( P.Chidambaram )

நேஷனல் ஹெரால்டு நாளிதழ் முறைகேடு வழக்கில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மூன்றாவது நாளாக அமலாக்கத்துறையில் நேற்றும் விசாரணைக்கு ஆஜரானார். முன்னதாக ராகுல் காந்தி மீதான அமலாக்கத்துறையின் இரண்டு நாள் விசாரணையின்போதே, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் டெல்லியில் கட்சித் தலைமையகத்தில் போராட்டம் நடத்திவந்தனர். அதைத் தொடர்ந்து, நேற்று மூன்றாவது நாளாக மீண்டும் காங்கிரஸ்காரர்கள் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். பின்னர் இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும்விதமாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைதுசெய்தனர். அதைத் தொடர்ந்து, போலீஸாரின் இத்தகைய நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி-யுமான ப.சிதம்பரம் ட்விட்டரில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ``அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில், போலீஸார் செய்தது மூர்க்கத்தனமான மற்றும் சுதந்திரத்தை மீறும் செயல். போலீஸாரிடம் வாரன்ட் எதுவுமில்லை. ஆனால், அவர்கள் அலுவலகத்துக்குள்ளே நுழைந்து எம்.பி-க்கள் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை இழுத்து சாலையில் வீசியுள்ளனர். எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மற்றும் மற்றவர்களின் மீதான இத்தகைய முரட்டுத்தனமான செயல்கள் வீடியோ எடுக்கப்பட்டுள்ளன. இங்கு ஜனநாயகத்தில் அனைத்து சட்ட விதிமுறைகளும், அரசியல் நெறிமுறைகளும் மீறப்பட்டுவிட்டன. போலீஸாரின் இத்தகைய நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என ப.சிதம்பரம் ட்வீட் செய்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism