Published:Updated:

கர்நாடகா: `நம்ம ஆர்.எஸ்.எஸ்’ எனக் கூறிய சபாநாயகர்... காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு!

விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி ( ட்விட்டர் )

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி ‘நம்ம ஆர்.எஸ்.எஸ்’ என சட்டசபையில் கூறியதற்கு, காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

கர்நாடகா: `நம்ம ஆர்.எஸ்.எஸ்’ எனக் கூறிய சபாநாயகர்... காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு!

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி ‘நம்ம ஆர்.எஸ்.எஸ்’ என சட்டசபையில் கூறியதற்கு, காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

Published:Updated:
விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி ( ட்விட்டர் )

கர்நாடக சட்டப்பேரவையில், சில பாஜக தலைவர்கள், அமைச்சர்களுடன் தனது தனிப்பட்ட உறவைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா பேசினார். ``முதலில் ஒருவரையொருவர் மனிதர்களாக மதிக்க வேண்டும். வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் எங்களுக்கும் தனிப்பட்ட உறவுகள் உள்ளன. முதலில் தனிமனிதன், பின்னர் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ் அல்லது காங்கிரஸ் எல்லாம்” என்றார். அப்போது சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி, "எங்கள் ஆர்.எஸ்.எஸ் குறித்து நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?" எனக் கேட்டார்.

இதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் சமீர் அகமது, “சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்திருப்பவர் எப்படி ‘நம்ம ஆர்.எஸ்.எஸ்’ என்று கூற முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, “சமீர் அகமதுவும்கூட ‘நம்ம ஆர்எஸ்எஸ்’ என சொல்லும் நாள் விரைவில் வரும்” என்று சபாநாயகர் விஸ்வேஷ்வர் பதிலளித்துள்ளார். சட்டப்பேரவையில் இதற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் எழுப்பினர்.

பாஜக
பாஜக

ஆனால், சபாநாயகருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் விரைந்துவந்தனர். இது குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா கூறும்போது, ``நாட்டிலுள்ள எல்லா இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு முதல்வர்கள் எனப் பலரும்ஆர்.எஸ்.எஸ் பின்புலம்கொண்டவர்கள்தான். அதை நீங்கள் ஏற்கத்தான் வேண்டும்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism