Published:Updated:

``பாஜக டெபாசிட் கூட வாங்காது, எடப்பாடி கம்பி எண்ணுவது உறுதி!" - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

ஈரோட்டில் வாக்களித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

`பா.ஜ.க, அ.தி.மு.க-வுடன் இருந்தபோது டெபாசிட் பெற்றார்கள். இப்போது அ.தி.மு.க-வோடு இல்லை என்ற காரணத்தால் கண்டிப்பாக தமிழகத்தில் எங்கும் அவர்கள் டெபாசிட் பெற மாட்டார்கள்.' - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அவர் மகனும் ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான திருமகன் ஈ.வெ.ரா ஆகியோர் குடும்பத்தினருடன் ஈரோடு அக்ரஹாரவீதி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தனர்.

வாக்களித்த பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ``காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து வருகின்றனர். கண்டிப்பாக திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை உள்ளாட்சித் தேர்தல் தரப்போகிறது என்பதைத் தான் இது காட்டுகின்றது. இந்த தேர்தலை பொறுத்தவரை தி.மு.க கூட்டணியை வெற்றி பெறச் செய்வதன் மூலம் ஸ்டாலின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும் என்பதை தமிழக மக்கள் மிக நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணித்து வருகிறது. தமிழகத்தை காப்பாற்றக் கூடிய வலிமையும், சக்தியும் பெற்ற ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் என்ற முறையில் அவருக்கு ஆதரவாக மக்கள் உள்ளனர். தமிழர்களின் மானம், சுயமரியாதை, சமூகநீதி கலாசாரம், மொழி காப்பாற்றப்பட வேண்டும் என்றால் ஸ்டாலின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும் என்ற மன நிலையில் தான் மக்கள் இருக்கின்றார்கள்.

ஈரோட்டில் வாக்களித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
ஈரோட்டில் வாக்களித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

தி.மு.க பொய்யான பிரசாரம் செய்வதாக எடப்பாடி சொல்கிறார். சொல்பவர் யார் என்றால் ஒரு பொய்யான மனிதர். பொய்யைத் தவிர வேறு எதுவும் பேசமாட்டார். கண்டிப்பாக கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளே போவதும் கம்பி எண்ணுவதும் உறுதி. அதற்காகத்தான் எதை எதையோ பிதற்றிக் கொண்டிருக்கிறார்.

பா.ஜ.க, அ.தி.மு.க-வுடன் இருந்தபோது டெபாசிட் பெற்றார்கள். இப்போது அ.தி.மு.க-வோடு இல்லை என்ற காரணத்தால் கண்டிப்பாக தமிழகத்தில் எங்கும் அவர்கள் டெபாசிட் பெற மாட்டார்கள். எஸ்.பி வேலுமணியைப் பொறுத்தவரை 4 தியேட்டர்கள் கட்டும் இடத்தில் ஒரு தியேட்டரை இலவசமாகக் கொடுங்கள் என கேட்கக் கூடிய நபர். அவரை வேற செக்‌ஷனில் போலீஸார் தூக்கிட்டுப் போயிருக்கணும்" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism