Published:Updated:

சசிகலா புஷ்பாவின் டெல்லி வீட்டில் பொருள்களை வெளியேற்றி, சீல் வைத்த அதிகாரிகள்! - காரணம் என்ன?

சசிகலா புஷ்பா

சசிகலா புஷ்பாவின் பதவிக்காலம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீட்டிலிருந்து அவர் வெளியேறாததாகக் கூறப்படுகிறது.

அ.தி.மு.க-வின் முன்னாள் ராஜ்ய சபா எம்.பி சசிகலா புஷ்பா தங்கியிருந்த டெல்லி அரசு குடியிருப்பு வீட்டில், அவரின் பொருள்களை வெளியே எடுத்துவைத்து வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்திருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா

தற்போது பா.ஜ.கவில் மாநில துணைத் தலைவராக இருக்கும் சசிகலா புஷ்பா, முன்பு அ.தி.மு.க-வில் மேயராக இருந்து பின், அ.தி.மு.க சார்பில் எம்.பி-யாக ராஜ்ய சபாவுக்குள் நுழைந்தார். அப்போது, டெல்லியில் மத்திய அரசு சார்பில் அவருக்கு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சசிகலா புஷ்பாவின் பதவிக்காலம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீட்டிலிருந்து அவர் வெளியேறவில்லை எனக் கூறப்படுகிறது.

சசிகலா புஷ்பாவின் டெல்லி வீட்டில் பொருள்களை வெளியேற்றி, சீல் வைத்த அதிகாரிகள்! - காரணம் என்ன?

இதற்கிடையில், வீட்டை காலி செய்யும்படி அரசு தரப்பிலிருந்து பலமுறை நோட்டீஸும் அனுப்பப்பட்டிருக்கிறது. இருப்பினும், சசிகலா புஷ்பா வீட்டை காலி செய்யாததால், அதிகாரிகள் சிலர் வீட்டிலிருக்கும் பொருட்களை வெளியே எடுத்துவைத்து, வீட்டுக்கு சீல் வைத்திருக்கின்றனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.