Election bannerElection banner
Published:Updated:

முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம் காலமானார்! - இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர்

பாப்பா சுந்தரம்
பாப்பா சுந்தரம் ( நா.ராஜமுருகன் )

குளித்தலை அருகேயுள்ள வலையப்பட்டியிலுள்ள அவரது வீட்டிலிருந்து இறுதி ஊர்வலம் நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார். வேறு முக்கிய நிர்வாகிகள் யாரும் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளவில்லை.

முன்னாள் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், முன்னாள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான பாப்பா சுந்தரம் (வயது 86) திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை உயிரிழந்தார். வீட்டில் கீழே வழுக்கி விழுந்து அடிப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்ததாகக் கூறப்படுகிறது.

பாப்பா சுந்தரம் உடல்
பாப்பா சுந்தரம் உடல்
நா.ராஜமுருகன்
கரூர்: தலைக்கேறிய போதை; தகராறு! - 75 அடி கிணற்றில் பிணமாக மிதந்த இளைஞர்

கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த வலையப்பட்டியைச் சேர்ந்தவர் பாப்பா சுந்தரம். இவருக்கு, பாலாமணி என்ற மனைவியும், கருணாகரன், கல்யாண்குமார் என்ற மகன்களும், கலாவதி என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்களில், கருணாகரன் அ.தி.மு.க குளித்தலை கிழக்கு ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். பாப்பா சுந்தரம், குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1989, 1991, 2001, 2011 சட்டப்பேரவைத் தேர்தல்களில் குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்று, நான்கு முறை தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதோடு, 2002-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகப் பதவிவகித்தார்.

2011-ம் ஆண்டு நான்காவது முறையாக குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அ.தி.மு.க கட்சியில் 1972-ம் ஆண்டு முதல், கட்சி உறுப்பினராக இணைத்துக்கொண்ட பாப்பா சுந்தரம், கரூர் மாவட்டத்தில் 2000 ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை கரூர் மாவட்டச் செயலாளராகவும், மாவட்ட அவைத் தலைவராகவும் பதவிவகித்திருக்கிறார். தற்போது, கட்சியின் அமைப்புச் செயலாளராக இருந்துவந்தார். இந்தநிலையில்தான், வீட்டில் வழுக்கி விழுந்த அவர், திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இயற்கை எய்தினார்.

பாப்பா சுந்தரம் உடல்
பாப்பா சுந்தரம் உடல்
நா.ராஜமுருகன்

இன்று குளித்தலை அருகேயுள்ள வலையப்பட்டியிலுள்ள அவரது வீட்டிலிருந்து இறுதி ஊர்வலம் நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார். வேறு முக்கிய நிர்வாகிகள் யாரும் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளவில்லை.

இதற்கிடையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, அ.தி.மு.க-வினர் சிலர் சமூக வலைதளங்களில், பாப்பா சுந்தரம் இறந்துவிட்டதாகத் தகவல் பரப்பினர். பாப்பா சுந்தரத்தின் எதிர்க்கோஷ்டியான, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்புதான் அப்படிச் செய்தி பரப்பியது என்று பாப்பா சுந்தரம் தரப்பில் சொன்னார்கள். இந்தநிலையில், பாப்பா சுந்தரத்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டதன் மூலம், அந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு