Published:Updated:

``இ.பி.எஸ் ஆட்சியை வேண்டாமென்றவர்கள் தற்போது யூ.பி.எஸ்-ஐ தேடுகிறார்கள்!" - ராஜேந்திர பாலாஜி

மே தின பொதுக்கூட்டம்

``இ.பி.எஸ்.ஆட்சியை வேண்டாம் என்ற மக்கள் தற்போது யூ.பி.எஸ்-ஸை தேடுகிறார்கள்" என்று சிவகாசியில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

``இ.பி.எஸ் ஆட்சியை வேண்டாமென்றவர்கள் தற்போது யூ.பி.எஸ்-ஐ தேடுகிறார்கள்!" - ராஜேந்திர பாலாஜி

``இ.பி.எஸ்.ஆட்சியை வேண்டாம் என்ற மக்கள் தற்போது யூ.பி.எஸ்-ஸை தேடுகிறார்கள்" என்று சிவகாசியில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

Published:Updated:
மே தின பொதுக்கூட்டம்

விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழாப்பொதுக்கூட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்துப் பேசினார்.

அப்போது, ``தொழிலாளர்களின் வாழ்வு வளம்பெற ஏராளமான திட்டங்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடியார் செயல்படுத்தினார்கள். தொழிலாளர்களை நம்பி இந்த இயக்கத்தை எம்.ஜி.ஆர். தொடங்கினார். தொழிலாளர்களின் உழைப்பை மதிக்கிற வகையில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனையின்பேரில் தமிழகம் முழுவதிலும் அண்ணா தொழிற்சங்கம் சார்பாக மே தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நான் குண்டக்க, மண்டக்க பேசுவேன், ஆனால் உண்மையைத்தான் பேசுவேன்.

தேனிக்குவந்த முதல்வர் ஸ்டாலினிடம் மின்சாரத்தை காணவில்லை என மக்கள் புகார் கொடுத்திருக்காங்க. அ.தி.மு.க ஆட்சியில் மின் கம்பியில் அணில், காக்கா, குருவிகள் நின்றது. ஆனால் கரண்ட் கட் ஆகவில்லை, தி.மு.க ஆட்சியில் மட்டும் மின்கம்பியில் அணில் நின்றால் மின்சாரம் தடைப்படுகிறது.

மே தின பொதுக்கூட்டம்
மே தின பொதுக்கூட்டம்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மக்கள் புலம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிப்பு தி.மு.க ஆட்சிக்கு அவமானம். இ.பி.எஸ். ஆட்சியை வேண்டாம் என்ற மக்கள் தற்போது யூ.பி.எஸ்.ஸை தேடுகிறார்கள். அ.தி.மு.க-வின் அனைத்துத் திட்டங்களையும் நிறுத்திய தி.மு.க அரசு புதிய திட்டங்களைக் கொண்டு வரவில்லை. வாக்களித்த மக்கள் வேதனையில் உள்ளார்கள். தி.மு.க எதற்கெடுத்தாலும் கவர்னரை குற்றம் சொல்லி வருகிறது. கவர்னர் அதிகாரத்தில் யாரும் தலையிடக்கூடாது. கவர்னரை குற்றம்சாட்டிவிட்டு புகார் மனுவை அவரிடமே கொடுக்கிறார்கள்.

ஒன்றிய அரசு என சொல்லும் முதல்வர், ஒவ்வொரு மத்திய அமைச்சர்களிடம் உதவி கேட்கிறார். முதல்வர் தமிழகத்துக்குள் ஒரு பேச்சு, டெல்லியில் ஒரு பேச்சு பேசுகிறார். தி.மு.க-வுக்கு வாக்கு வங்கியே கிடையாது. அ.தி.மு.க-வில் பிளவு ஏற்படும்போது மட்டுமே ஆட்சிக்கு வரும் கட்சி தி.மு.க. பட்டாசு தொழிலை தி.மு.க அரசு பாதுகாக்க தவறுகிறது. பட்டாசு விபத்து ஏற்பட்டால் பட்டாசு ஆலை உரிமையாளரைக் கைது செய்யும் நடவடிக்கை கூடாது. பட்டாசு விபத்து ஏற்பட்டால் ஆலை உரிமையாளர்களிடம் பேரம் பேசுகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிவகாசியில் 80 பட்டாசு ஆலைகள் இயங்காமல் இருக்கின்றன. சீனா பட்டாசு இறக்குமதியை ஊக்குவிக்க மறைமுக முயற்சி நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு, கைத்தறி, பருப்பு கொள்முதல், நூற்பாலை, அச்சகம் உள்ளிட்ட அனைத்துத் தொழில்களும் முடங்கியிருக்கின்றன. இதனை தி.மு.க அரசு கண்டுகொள்வதில்லை. தி.மு.க ஆட்சியில் 110 விதியில் மக்களுக்கான திட்டங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. மானியக் கோரிக்கைகளிலும் எந்த திட்டங்களும் அறிவிப்பதில்லை. தமிழகத்தின் நிலவரம் கலவரமாக உள்ளது.

பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டம்

இந்த ஆட்சி நல்லது செய்வதாக யாரும் சொல்வதில்லை. தி.மு.க ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி விரைவில் மலர உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றிபெறும்" என்று பேசினார்.

கூட்டத்தில், முன்னாள் எம்.பி ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ மான்ராஜ் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism