Published:Updated:

திரிபுரா முன்னாள் முதல்வரின் பூர்வீக வீட்டுக்குத் தீவைப்பு: சிபிஎம் ஆதரவாளர்களைச் சாடும் பாஜக!

பிப்லாப் தேப் ( ட்விட்டர் )

தாக்குதலுக்கு உள்ளானபோது வீட்டில் யாரும் இல்லை. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

திரிபுரா முன்னாள் முதல்வரின் பூர்வீக வீடு அடையாளம் தெரியாத நபர்களால் தீவைத்து சேதப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

திரிபுராவின் முன்னாள் முதல்வரான பிப்லாப் தேப்பின் (Biplab Deb) தந்தை ஹிருதன் தேப்பின் நினைவுதினம் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 4-ம் தேதி நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் அவருடைய பூர்வீக வீட்டில் நடந்துவந்திருக்கிறது. இந்த நிலையில், நேற்று மாலை அடையாளம் தெரியாத ஒரு கும்பல், வீட்டருகே வந்து, கற்களால் வீட்டைச் சேதப்படுத்தியதாகத் தெரிகிறது. மேலும், வீட்டின் ஜன்னல், பூந்தொட்டிகள், கார் கண்ணாடி போன்றவற்றை அடித்து நொறுக்கியிருக்கிறது அந்தக் கும்பல். அதைத் தொடர்ந்து, வீட்டுக்கும் தீவைத்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறது.

கார் கண்ணாடி உடைப்பு
கார் கண்ணாடி உடைப்பு
ட்விட்டர்

இது தொடர்பாக காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்திருக்கின்றனர். மேலும், இதற்குக் காரணமானவர்களைத் தேடிவருகின்றனர். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களையும், அந்தப் பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களையும் சோதித்துவருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் முதல்வர் பிப்லாப் தேப்பின் பூர்வீக வீட்டைச் சேதப்படுத்தியது சிபிஎம் ஆதரவாளர்கள் என பா.ஜ.க குற்றம்சாட்டியிருக்கிறது.

தாக்குதலுக்கு உள்ளானபோது வீட்டில் யாரும் இல்லை. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.