Published:Updated:

``வருங்காலத்தில் காங்கிரஸ் பிராந்திய கட்சியாக இருக்கும்" - முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் தாக்கு

முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வனி குமார்

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வனி குமார், காங்கிரஸின் இந்த நிலை குறித்து தனியார் ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.

``வருங்காலத்தில் காங்கிரஸ் பிராந்திய கட்சியாக இருக்கும்" - முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் தாக்கு

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வனி குமார், காங்கிரஸின் இந்த நிலை குறித்து தனியார் ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.

Published:Updated:
முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வனி குமார்

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடையவில்லை எனினும், தற்போதுவரை வெளியான முடிவுகளின்படி உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க முன்னிலையில் உள்ளது. மேலும், கோவாவில் மட்டும் சுயேச்சைகளின் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சியமைக்கும் என பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் கூறியுள்ளார். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி 90-க்கும் மேற்பட்ட இடங்களுடன் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கவுள்ளது.

காங்கிரஸ்
காங்கிரஸ்

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து மாநிலங்களிலும் தோல்வியைத் தழுவும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வனி குமார், காங்கிரஸின் இந்த நிலை குறித்து தனியார் ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அஸ்வனி குமார், ``காங்கிரஸின் இந்த நிலை குறித்து நான் மகிழ்ச்சியடையவில்லை. ஆனால் அரசியலில், காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பானது எதிர்காலத்தில் குறைவாக இருக்கும். மேலும் நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டால், காங்கிரஸ் ஒரு பிராந்திய கட்சியாக இருக்கும்" என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism