Published:Updated:

``அமைச்சராக இருந்தபோது என்மீதும்தான் செருப்பு வீசப்பட்டது..!" - பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்

``2017-ம் ஆண்டு மந்திரியாக இருந்தபோது சேலத்துக்கு வந்த என்மீதும் செருப்பு வீசப்பட்டது. அன்று எத்தனை பேர் கண்டனம் தெரிவித்தனர்?" - பொன்.ராதாகிருஷ்ணன்

``அமைச்சராக இருந்தபோது என்மீதும்தான் செருப்பு வீசப்பட்டது..!" - பொன்.ராதாகிருஷ்ணன்

``2017-ம் ஆண்டு மந்திரியாக இருந்தபோது சேலத்துக்கு வந்த என்மீதும் செருப்பு வீசப்பட்டது. அன்று எத்தனை பேர் கண்டனம் தெரிவித்தனர்?" - பொன்.ராதாகிருஷ்ணன்

Published:Updated:
பொன்.ராதாகிருஷ்ணன்

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக எப்போதும் கருதப்படும். அவை மதிக்கப்பட வேண்டும். இன்று வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு குறித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிந்தித்து முடிவெடுப்பார்கள் என நம்புகிறேன். புரட்சித் தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி, என்றும் எப்போதும் அப்படியே திகழ்வதற்கான வாய்ப்புகள் வரும் என நம்புகிறேன். நீதிமன்ற தீர்ப்பை சார்ந்து அவர்கள் எடுக்கக்கூடிய முடிவை அவர்கள் சரியான முறையில் சிந்தித்து எடுப்பார்கள் என நம்புகிறேன். இன்னொரு கட்சிக்கு ஆலோசனை சொல்லக்கூடிய அளவுக்கு நான் இல்லை.

அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ்
அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ்

தி.மு.க-வினர் சமரசம் என்று எதை சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க-விடம் சமரசம் செய்யத் தயாராக இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்காக உங்களோடு சமரம் செய்வதற்கு பா.ஜ.க தயாராக இருக்கிறது. செருப்பு வீசிய விவகாரத்தில் காவல்துறையினர் எந்த அடிப்படையில் கைதுசெய்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. இதேபோல் எல்லா விஷயத்திலும், எல்லோர்மீதும் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறார்களா? இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்லவேண்டியிருக்கும்.

பொன் ராதாகிருஷ்ணன்
பொன் ராதாகிருஷ்ணன்

கடந்த 2017-ம் ஆண்டு சேலத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் படித்தபோது உயிரிழந்த விவகாரம் மிகப் பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து, அப்போது மத்திய அமைச்சராக இருந்த நான், அவர் உடலை மீட்டு சேலத்தில் ஒப்படைத்துவிட்டு திரும்பியபோது என்மீதும் செருப்பு வீசப்பட்டது. எனது காரிலும் தேசியக்கொடி கட்டப்பட்டிருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் அப்போது என்னை மந்திரியாக நினைக்கவில்லையா, அதற்காக, செருப்பு வீசிதை சரி என நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன், அது சரியானது அல்ல.

ஆனால் மந்திரிமீதே வீசி இருக்கிறார்கள் என்று சொன்னால் அன்று நானும் மந்திரியாக இருந்தபோதுதான் என்மீது வீசப்பட்டது. அன்று எத்தனை பேர் வந்து கண்டனம் தெரிவித்தனர். அப்போது அதனை நான் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஒரு ஆவேசத்தில் சில மக்கள் இருக்கும்போது அதனை பெரிய மனதோடு விலகிச் செல்ல வேண்டும். அதற்காக செருப்பு வீசுவது புதுசு போன்றும், 'உங்கள்மீது வீசினால் செருப்பு எங்கள்மீது வீசினால் மாலை' என்று சொல்லக்கூடாது. மந்திரிமீது மட்டுமில்ல, சாதாரண மனிதன் யார்மீதும் செருப்பை வீசக்கூடாது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இலங்கை கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் சீன உளவுக் கப்பல்
இலங்கை கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் சீன உளவுக் கப்பல்

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் தொடர்ந்து மீனவர்கள் மரணமடைந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை 27 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த துறைமுகத்தில் நிரம்பி இருக்கக்கூடிய மணலை எடுக்க வேண்டும். அதன் பணிகளை தமிழ்நாடு அரசு விரைவாக முடிக்கவேண்டும். அதற்கான உதவிகளை மத்திய அரசு செய்ய தயாராக இருக்கிறது" என்றார்.