Published:Updated:

`1,850 ஆண்டுகளுக்கு முன்பே நதிக்கரை நாகரிகம்!' - கீழடியைத் தொடர்ந்து கரூரில் அகழாய்வு

கீழடி அகழ்வாராய்ச்சிக்கு இதுவரை மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை. தமிழகத்தில் நான்கு இடங்களில் அருங்காட்சியகம் அமைக்கக் கேட்டுள்ளோம்.

அமைச்சர் பாண்டியராஜன்
அமைச்சர் பாண்டியராஜன்

``கீழடி அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை. தமிழகத்தில் நான்கு இடங்களில் அருங்காட்சியகம் அமைக்கக் கேட்டுள்ளோம். இதற்கு மத்திய அரசு இசைவு தெரிவித்தாலே 100 கோடி ரூபாய் வரும். மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் என நம்புகிறோம்" என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

அமைச்சர் பாண்டியராஜன்
அமைச்சர் பாண்டியராஜன்
``டிஸ்னி வேர்ல்டு போல கீழடியில் அருங்காட்சியகம்!'' -  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

கரூரில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் மண்ணின் கலை விழா, மாவட்டக் கலை விருதுகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
நா.ராஜமுருகன்

விழாவின்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், `` வரும் ஆண்டு முதல் கலைமாமணி விருதுகள் செவ்வியல் கலைகளுடன் சேர்த்து, நாட்டுப்புறக் கலைகளுக்கும் வழங்கப்படும். நாட்டுப்புறக் கலைஞர்கள் வாரியத்தில் 33,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த ஆண்டுக்குள் ஒரு லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.

`கி.மு. 6 -ம் நூற்றாண்டைவிட பின்னோக்கிச் செல்ல வாய்ப்பு..!’ - கீழடி குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணன்

கரூர் உட்பட தமிழகத்தில் 60 இடங்களில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. இதுதவிர, 140 இடங்களில் மத்திய தொல்லியல் துறை ஆய்வு செய்துள்ளது. இந்த 200 இடங்களில் நடைபெற்றுள்ள ஆய்வுகளையும் பகுப்பாய்வு செய்து, தமிழர் நாகரிகம் என்றால் என்ன என்பது குறித்து ஒரு நூலை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

கீழடி அகழ்வாராய்ச்சிக்கு இதுவரை மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை. தமிழகத்தில் நான்கு இடங்களில் அருங்காட்சியகம் அமைக்கக் கேட்டுள்ளோம். இதற்கு இசைவு தெரிவித்தாலே 100 கோடி ரூபாய் நமக்கு வரும். வெளிநாடுகளுக்கு கலை, பண்பாட்டுத்துறை சார்பாக செல்லும் கலைஞர்களுக்காக 1 கோடி ரூபாயாக இருந்த நிதியை 3 கோடி ரூபாயாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

கலை பண்பாட்டு விழா
கலை பண்பாட்டு விழா

202 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

கீழடிபோல கரூரிலும் அகழ்வாராய்ச்சியைத் தொடங்க வாய்ப்பு உள்ளது. காரணம், 1,850 ஆண்டுகளுக்கு முன்னரே வணிக வளர்ச்சியில் முன்னோடியாக கரூர் இருந்துள்ளது. அமராவதி நதிக்கரையோரம் உள்ள கரூர், நதிக்கரை நாகரிகமாக திகழ்ந்துள்ளது. தமிழ் இலக்கிய, கலாசாரம் போன்றவற்றை தொகுத்து, நூலாகவும் வெளியிட முயற்சிகள் நடந்துவருகின்றன. புவியியல்ரீதியாக 8 வகையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன" என்றார்.