Published:Updated:

“எங்க தாத்தா பகுத்தறிவுவாதி இல்லையே?”

Radha Ravi
பிரீமியம் ஸ்டோரி
Radha Ravi

‘`உங்கள் தந்தை எம்.ஆர்.ராதா மிகப்பெரிய பகுத்தறிவாளர்... ஆனால், நீங்கள்?’’

“எங்க தாத்தா பகுத்தறிவுவாதி இல்லையே?”

‘`உங்கள் தந்தை எம்.ஆர்.ராதா மிகப்பெரிய பகுத்தறிவாளர்... ஆனால், நீங்கள்?’’

Published:Updated:
Radha Ravi
பிரீமியம் ஸ்டோரி
Radha Ravi

2019-ம் வருடத்தில் மட்டும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க- என மூன்று கட்சிகளுக்குத் தாவி ‘ஹாட்ரிக்’ அடித்திருக்கிறார் ராதாரவி! நடிப்புலக வில்லனான ராதாரவிக்கு, ‘ச்சும்மா கிழி’த்துத் தொங்கவிடும் அவரது ஒளிவுமறைவில்லாத பேச்சுதான் நிஜத்தில் வில்லன்! அதனாலேயே அரசியலில் நிரந்தர இடமின்றி ‘மியூசிக்கல் சேர்’ நடத்திக்கொண்டிருப்பவரை, அவரது வீட்டில் சந்தித்துப் பேசினேன்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘`திராவிட இயக்கங்களில் பயணித்துவந்த ராதாரவி, அதற்கு நேரெதிர்க் கொள்கைகளைக் கொண்ட பா.ஜ.க-வில் திடீரெனத் தன்னை இணைத்துக்கொண்டது ஏன்?’’

``நான் ஓர் இந்து! பா.ஜ.க-வின் கொள்கைகளும் எனக்குப் பிடித்திருந்தன. ‘பா.ஜ.க-வைப் பற்றி நாம் இதுவரை பார்த்துவந்த விஷயங்கள் எல்லாம் தவறானவை’ என்பது அங்கே போய்ப் பார்த்த பிறகுதான் தெரியவருகிறது. ‘இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் சமமாக வைத்திருக்கிறீர்களா’ என்று பொன்னார் ஐயாவிடமே கேட்டேன்.

‘காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்திருக்கிறோம். ஆனாலும் அங்கிருக்கும் ஒரு முஸ்லிமைக்கூட வெளியேறச் சொல்லவில்லை. ஆனால், ஜம்மு காஷ்மீர் லடாக்கில், எல்லாப் பண்டிட்டுகளையும் வெளியேற்றிய வரலாறு இருக்கிறது’ என்றார். இப்படி என் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்த பிறகுதான் பா.ஜ.க-வில் நான் இணைந்தேன்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘`உங்கள் தந்தை எம்.ஆர்.ராதா மிகப்பெரிய பகுத்தறிவாளர்... ஆனால், நீங்கள்?’’

``எங்க அப்பா பகுத்தறிவாளர்; அவரின் அப்பா? பகுத்தறிவாளர் இல்லையே... அப்படியென்றால், நான் மட்டும் ஏன் அப்படி இருக்கக்கூடாது? வாழ்க்கையில், அப்பாவோடு நீண்டநாள் பயணித்திருக்கிறேன். அவரிடம் எனக்குப் பிடித்த நிறைய விஷயங்கள் உண்டு. ஆனால், அவர் உயிரோடு இருக்கும்போதே நான் கோயில்களுக்குப் போய்வந்திருக்கிறேன். ‘ஏண்டா கோயிலுக்குப் போறே...’ன்னு அவரே என்கிட்ட எதுவும் கேட்டதில்ல... என்னைப் பொறுத்தவரையில், என் அப்பா - அம்மாதான் நான் பார்த்த கடவுள்.’’

‘`2019-ம் வருடத்தில் மட்டுமே தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க என மூன்று கட்சிகள் மாறியிருக்கிறீர்களே...?’’

``பணம், பதவி கேட்டா நான் தி.மு.க-வுக்குப் போனேன்? அங்கேயும்கூட ‘நான் பெண்களுக்கு விரோதி’ என்பது மாதிரி சித்திரிக்கப்பட்ட பிறகு, வெளியே வருவதுதானே மரியாதை..! அதனால் வந்துவிட்டேன்.’’

‘`குறிப்பிட்ட நடிகை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நீங்கள் பேசியிருக்கும்போது, கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கியது சரியான நடவடிக்கைதானே?’’

"அன்றைக்கு நான் பேசியது, அறிவாலயத்திலோ, தி.மு.க மாநாட்டு மேடையிலோ அல்ல... அது வேறு ஒரு தனிப்பட்ட மேடை. அங்கேயும்கூட நான் அந்தக் குறிப்பிட்ட நபரைப் பற்றிப் பேசவேயில்லை. ஆனாலும் சில பத்திரிகைகளில் என் பேச்சைத் திரித்து வெளியிட்டுவிட்டதால் வந்த வினை.

“எங்க தாத்தா பகுத்தறிவுவாதி இல்லையே?”
“எங்க தாத்தா பகுத்தறிவுவாதி இல்லையே?”

நிரந்தர நீக்கமோ, தற்காலிக நீக்கமோ... கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற முறையில் என்னிடம் நீங்கள் எதுவும் கேட்க முன்வரவில்லை என்கிறபோதே, நான் தேவையற்றவனாகிவிட்டேன். எனவே, ‘என்னை வெச்சுக்காதீங்க...’ என்றுதான் நானே வெளியேறிவிட்டேன்!

கருணாநிதி எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தில், ‘கலைஞர்’ என்ற பட்டத்தைக் கொடுத்தவர் எம்.ஆர்.ராதா’ என்று எந்த இடத்திலும் என் தந்தையின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதை நான் ஒரு பேட்டியிலும் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால், அதே புத்தகத்தில், மிசாவில் கைதான திராவிடர் கழகத் தோழர்கள் பட்டியலில் இருந்த என் தந்தையின் பெயரைச் சுட்டிக்காட்டிப் பேசுகிற தி.மு.க ஐ.டி விங் அப்துல்லா என்பவர், ‘ராதாரவியின் அப்பாதானே எம்.ஆர்.ராதா...’ என்று நாசூக்காகக் கிண்டலடிக்கிறார். ஏன் இதே கேள்வியை மு.க.ஸ்டாலினை முன்வைத்து நான் சுட்டிக்காட்டினால் அவர்கள் பொறுத்துக் கொள்வார்களா? அப்படியென்றால், அப்துல்லாவின் இந்தப் பேச்சை எப்படி தி.மு.க-வின் தலைவர் கண்டிக்காமல்போனார்?’’

‘`அ.தி.மு.க-வில் இப்படி எந்தப் பிரச்னையும் இல்லாத சூழலிலும்கூட அங்கிருந்து வெளியேறிவிட்டீர்களே...?’’

``அதுதான் பிரச்னையே...! அ.தி.மு.க-வில், ஜெயலலிதா மாதிரியான சிங்கத்தின் தலைமையின்கீழ் இருந்தவன் நான். அப்போதெல்லாம் நான், மாமா எஸ்.எஸ்.சந்திரன் போன்றோரெல்லாம் தினந்தோறும் கட்சி மீட்டிங்கிற்காக ஓடிக்கொண்டே இருப்போம். அந்த அளவு எங்களையெல்லாம் கட்சிப் பணிக்காகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரிந்தவராக இருந்தார் ஜெயலலிதா.

பா.ஜ.க எடுக்கிற சில முடிவுகள் பிடித்ததனால்தான் நான் அந்தக் கட்சியில் இணைந்திருக்கிறேனே தவிர, எந்தவொரு தனிப்பட்ட நபரையும் பார்த்து நான் கட்சியில் சேரவில்லை.

‘அப்படியென்றால், இப்போது இருக்கும் தலைமை சரியில்லையா...’ என்று நீங்கள் அடுத்த கேள்வியைக் கேட்கக்கூடாது. சினிமா பாஷையில் சொல்வதென்றால், ‘கெமிஸ்ட்ரி ஒத்துப் போகவில்லை!’ பா.ஜ.க தரப்பிலிருந்தும் கடந்த ஓராண்டாகவே என்னைக் கட்சியில் சேரச்சொல்லி அழைத்துக் கொண்டிருந் தார்கள்.’’

‘`பா.ஜ.க-வில் நீங்கள் இணைந்ததையொட்டிக் கருத்து தெரிவித்துள்ள வானதி சீனிவாசன், ‘ராதாரவி இனியாவது நாகரிகமாக நடந்துகொள்வார்’ என்ற தொனியில் பேசியிருக்கிறாரே...?”

``இனியாவது நாகரிகமாகப் பேசுவார் என்று அவர் சொல்லவில்லை. வார்த்தையை நீங்கள் ட்விஸ்ட் செய்துவிட்டீர்கள். ‘எங்கள் கட்சிக்கென்று கட்டுப்பாடு இருக்கிறது. அதை அவரும் கடைப்பிடிப்பார் என்று நம்புகிறேன்’ என்றுதான் கூறியிருக்கிறார். அதேசமயம், ‘ராதாரவிக்கும் கட்டுப்பாடு இருக்கிறது’ என்பதை வானதி சீனிவாசனும் தெரிந்துகொள்ள வேண்டும்.

Radha Ravi
Radha Ravi

அவரது அந்தப் பேட்டியைப் படித்து நானும் மனம் சங்கடப்பட்டேன். நான் பா.ஜ.க-வில் சேர்ந்திருப்பது குறித்துத் திரைப்பட சகோதரர்களும் தொழிலதிபர்களும் அவரிடம் பேசியதாகக் குறிப்பிடுகிறார். ராதாரவி, கட்சியில் சேர்ந்திருப்பது பற்றித் தொழிலதிபர்கள் ஏன் பேசவேண்டும்? அடுத்ததாக எனக்குத் தெரியாத சினிமா சகோதரர்கள் இவருக்கு எப்படித் தெரிந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

பா.ஜ.க எடுக்கிற சில முடிவுகள் பிடித்ததனால்தான் நான் அந்தக் கட்சியில் இணைந்திருக்கிறேனே தவிர, எந்தவொரு தனிப்பட்ட நபரையும் பார்த்து நான் கட்சியில் சேரவில்லை. நானும் கொள்கை, லட்சியத்தோடு இருக்கிறவன்தான். கட்சிகளைப் பிரிவதனாலேயே கொள்கைகள் பிரிந்துவிடாது. ராதாரவி, எப்போதும் ராதாரவிதானே...

தொகுதிக்கு 2,500 ஓட்டுகள் வாங்குகிற நீ, மற்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்தால்தான் வெற்றிபெற முடியும்’ என்று சகோதரர் சீமானிடமே சொல்லிவிட்டேன்.

நான் பா.ஜ.க-வில் சேர்ந்ததே இவருக்குத் தெரியாதாம். ‘இனிமேல் ஒழுக்கமாக இரு’ என்றும் சொல்கிறார். என்னமோ இதுவரை நான் வேறமாதிரி வாழ்ந்த மாதிரியும் இவர் சொல்வது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. ஜே.பி.நடால், முரளிதர ராவ், பொன்னார், இல.கணேசன், ஹெச்.ராஜா எல்லோருக்கும் தெரிந்துதான் நான் கட்சியில் சேர்ந்திருக்கிறேன். எஸ்.வி.சேகர்கூட எனக்கு வாழ்த்து தெரிவித்தாரே... ஆனால், இவருக்கு மட்டும் நான் கட்சியில் சேர்ந்ததே தெரியவில்லை என்றால், இவர் அந்த அளவுக்கு முக்கியமான தலைவர் இல்லை போலிருக்கு.’’

‘`தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆளவேண்டும் என்ற சீமானின் கருத்தை எந்த அடிப்படையில் நீங்கள் வரவேற்கிறீர்கள்?’’

``சீமான் பேசிவருகிற பல நியாயமான விஷயங்களில் இதுவும் ஒன்று. ‘தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆளவேண்டும்’ என்பதற்கு உதாரணமாக கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சுட்டிக்காட்டுகிறார். ஆனால், தலைமைப் பொறுப்புக்கு வருவதற்கு ஒரு வசீகரம் வேண்டும். வெறும் ‘தமிழ் தமிழ்’ என்றே சொல்லிவருகிற சீமானுக்கு குறிப்பிட்ட ஒரு கூட்டத்தினரிடையே மட்டும்தான் ஈர்ப்பு இருக்கிறது. அதனால்தான், ‘தொகுதிக்கு 2,500 ஓட்டுகள் வாங்குகிற நீ, மற்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்தால்தான் வெற்றிபெற முடியும்’ என்று சகோதரர் சீமானிடமே சொல்லி விட்டேன்.’’

‘`தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆளவேண்டும் என்று சொல்கிற நீங்கள், தமிழர் அல்லாத ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை வரவேற்பீர்களா?’’

‘`ரஜினிகாந்த் எனக்கு நல்ல நண்பர். நல்ல மனிதர். கடைக்கோடி மக்கள் வரை எல்லோருக்கும் அறிமுகமானவராகவும் இருக்கிறார். ஆனாலும்கூட, அவர் அரசியலுக்குள் வருவதை நான் விரும்பவில்லை. ஏனெனில், இங்கு எல்லோரும் சகட்டுமேனிக்குப் பேசுவார்கள். அதுமட்டுமல்ல... மக்களைச் சந்திப்பதற்காக, அனைத்து ஊர்களுக்கும் பயணப்பட வேண்டியதிருக்கும்.அடுத்து, ‘நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்!’

“எங்க தாத்தா பகுத்தறிவுவாதி இல்லையே?”

என்று ரஜினிகாந்த் அறிவிக்கவேண்டும். ‘கமல்ஹாசனும் நானும் ஒன்றாகச் சேருவோம்’ என்று அவர் சொல்லிமுடித்த மறுநாளே நடிகை ஸ்ரீபிரியா, ‘ரஜினி - கமல் ஒன்றாகச் சேர்ந்தாலும்கூட எங்க கமல்ஹாசன்தான் முதலமைச்சர் வேட்பாளர்’ என்று சொல்லிவிட்டாரே... ஆக அரசியலில் நிறைய சிரமப்பட வேண்டும். இதெல்லாம் ரஜினிகாந்துக்குச் சரிப்பட்டுவராது.’’

‘`ரஜினியோடு ஒப்பிடும்போது, கமல்ஹாசனின் அரசியல் நடவடிக்கைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘`கமல்ஹாசன் அரசியலுக்குள் வந்துவிட்டார். சரியோ, தப்போ... தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதில் உறுதியாக இருப்பவரும்கூட. எனவே, அரசியலில், தாக்குப்பிடித்தால் நிச்சயம் அவர் முதலமைச்சர். ஆனால், அவர் 10 நிமிடம் பேசினால், எளிமையாகப் புரியும்படி பேசினால்தான் சாமான்ய மக்களைப் போய்ச்சேர முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism