இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிவருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ரஷ்யாவில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி 1917-ம் ஆண்டு புரட்சியின் மூலம் தூக்கியெறிந்தது. அங்கு உழைப்பாளி மக்களின் ஆட்சியதிகாரம் நிறுவப்பட்டது. அந்த நேரத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த இந்தியர்கள் மத்தியில் ரஷ்யப் புரட்சி பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியது. `ஆகா வென்றெழுந்தது பார் யுகப்புரட்சி...’ என்று பாடினார் மகாகவி பாரதியார்.

ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் கிளை, உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் 1920-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி ஏற்படுத்தப் பட்டது. பிறகு, இந்தியாவின் பல பகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகள் நிறுவப்பட்டன. கம்யூனிஸ்ட்களின் முதல் மாநாடு 1925-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி கான்பூரில் நடைபெற்றது. அதில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த சிங்காரவேலர் தலைமையில்தான் அந்த மாநாடு நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் கிளை தொடங்கப்பட்டு, 2020-ம் ஆண்டுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதையொட்டி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய ஆளுமைகளின் நேர்காணல்கள் ஜூனியர் விகடனில் தொடர்ச்சியாக வெளிவரவுள்ளன.

இந்தியாவில் மிக மூத்த தோழர்களில் முக்கிய மானவர் நல்லகண்ணு; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர். இன்னோர் ஆச்சர்யம்... இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு நடைபெற்ற 1925-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதிதான் நல்லகண்ணுவும் பிறந்தார்.

நல்லகண்ணுவைச் சந்திக்க கே.கே.நகர் வீட்டுக்குச் சென்றோம். “நாகர்கோவில்ல எழுத்தாளர் பொன்னீலனுக்கு 80-வது பிறந்த நாள் விழா. அதுக்குப் போயிட்டு காலையில தான் வந்தேன்” என்றபடி வரவேற்றார்.

“இந்த வயதிலும் நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்களே?” என்றதும், “டிசம்பர் 26 வந்தால் எனக்கு 95 வயது. முக்கியமான நிகழ்ச்சிகளுக்குப் போய்த்தானே ஆக வேண்டும்” என்று வாய்விட்டுச் சிரித்தார்.

அவரது உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. “இன்னமும் தனியேதான் ரயில் பயணமா?” என்றோம்.

“ஸ்டேஷன் வரைக்கும் யாராவது ஒரு தோழர் வந்து விட்டுவிட்டுப் போவார். எந்த ஊரில் இறங்குகிறேனோ அங்கே ஒரு தோழர் வந்து அழைத்துச் செல்வார். ரயிலில் படுக்கை விரிக்கும்போது, ‘என்ன சார் துணைக்கு ஆள் இல்லையா?’ என்று பக்கத்தில் இருப்பவர்கள் உடன்வந்து உதவி செய்வார்கள். அது எனக்கு சங்கடமாக இருந்தது. அதனால், கடந்த இரு மாதங்களாக துணைக்கு இளம் தோழர் ஒருவரை அழைத்துச் செல்கிறேன்” என்றார்.

“இப்போதும் இரண்டாம் வகுப்பு பெட்டியில்தான் பயணமா?” என்ற கேள்விக்கு, “பெரும்பாலும் இரண்டாம் வகுப்புப் பெட்டிதான். டிக்கெட் கிடைக்காதபோது சில நேரம் 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டியில் செல்வேன்” என்றார்.

தி.நகரில் உள்ள அரசு வாடகை வீட்டில் பல ஆண்டுகளாக குடும்பத்துடன் நல்லகண்ணு வசித்துவந்தார். கடந்த மே மாதம் வீட்டை காலிசெய்யச் சொல்லிவிட்டது தமிழக அரசு. அதனால், கே.கே.நகரில் வாடகை வீட்டில் குடியேறியுள்ளார் நல்லகண்ணு.

“இந்த வீடு வசதியாக இருக்கிறதா?” என்றதும், “இது கொஞ்சம் பெரிய வீடுதான். ஆனால், பழைய வீடு மாதிரி வசதி இல்லை. அங்கு இருக்கும் போது கட்சி அலுவலகம் அருகிலேயே இருந்தது. 50 ரூபாய் கொடுத்து ஆட்டோவில் போய்விடுவேன். இப்போது இங்கிருந்து போக 150 ரூபாய் செலவாகிறது. என்னைப் பார்ப்பதற்காக தோழர்கள் பலரும் வருவார்கள். அதற்கெல்லாம் அந்த வீடுதான் வசதியாக இருந்தது. இந்த வீடு கொஞ்சம் தொலைவு என்பதால் பலரும் இங்கே வர சிரமப்படுகிறார்கள்” என்றார்.

‘‘உடல்நலனை எப்படிக் கவனித்துக்கொள்கிறீர்கள்?” என்றோம்.

“தினமும் காலை 6 மணிக்கு எழுந்துவிடுவேன். நடைப் பயிற்சி, மூச்சுப்பயிற்சி என்று அரை மணி நேரம் தேகப் பயிற்சி. சைவ உணவுக்கு மாறி ஐந்து வருடங்கள் ஆயிற்று. எனக்கு மீன்குழம்பு ரொம்பப் பிடிக்கும். அதனால், நான் எந்த ஊருக்குப் போனாலும் தோழர்கள் மீன்குழம்பு வைத்திருப்பார்கள். ‘மீன் குழம்புன்னா... சாப்பாடு இழுக்கும். எடை அதிகரிக்கக் கூடாது’ என்று டாக்டர் சொல்லிவிட்டார். அதனால், மீன்குழம்பை விட்டு விட்டேன். கொழுப்பு சேரும் என்பதால் ஆட்டுக்கறியையும் விட்டுவிட்டேன்” என்று சிரித்துக்கொண்டே சொன்னவரிடம், கட்சி தொடர்பான சில கேள்விகளை முன்வைத்தோம்.

“இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டாடிவருகிறது. இந்தத் தருணத்தில் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?”

“பழைய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்களில் தோழர்கள் என்.சங்கரய்யா, தா.பாண்டியன், நான் ஆகிய மூன்று பேர் மட்டும்தான் இப்போது உயிருடன் இருக்கிறோம். சங்கரய்யாவுக்கு 98 வயதாகிறது. தா.பாண்டியனுக்கு 87 வயது. நாங்கள் சந்தித்துக்கொள்ளும்போது ‘நம்ம கட்சி’ என்றுதான் பேசிக்கொள்வோம். இந்தத் தருணத்தில் நான் சொல்ல விரும்புவது, சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதுதான்.”

“அதற்கான தேவை இருக்கிறதா?”

“கொள்கையிலோ கோரிக்கைகளிலோ இரு கட்சிகளுக்கும் இடையே வித்தியாசம் கிடையாது. அடிப்படைக் கொள்கை ஒன்றுதான். கருத்து வித்தியாசங்கள் இருந்தால், அவற்றை மாற்றிக்கொள்ளலாம் அல்லது அனுசரித்துப் போகலாம். இரண்டு கட்சிகளும் இணைவதால், கம்யூனிஸ்ட் இயக்கம் பலம்பெறும். இதையெல்லாம் தாண்டி, கம்யூனிஸ்ட் கொள்கையை ஆதரிக்கக் கூடியவர்கள் மத்தியில் பெரும்நம்பிக்கையை அது உருவாக்கும். அப்படிப்பட்ட அனைவரும் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி வருவார்கள்.”

“நூற்றாண்டு கண்ட இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் இதுவரை சாதித்தது என்ன?”

“சுதந்திரப் போராட்டம் தொடங்கி இன்று வரை மக்களுக்காக தன்னலமின்றி களத்தில் போராடிவரும் கட்சி என்ற பெருமை கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு. குடிநீர் உள்ளிட்ட மக்களின் அடிப்படைப் பிரச்னைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளுக்காகவும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்காகவும், மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காகவும் கம்யூனிஸ்ட்களாகிய நாங்கள்தான் களத்தில் போராடுகிறோம். எங்கள் போராட்டங்களால்தான் நிலச் சீர்திருத்தச் சட்டம், குடியிருப்பு மனைச் சட்டம், பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் உட்பட பல சட்டங்கள் வந்தன.

விவசாயக் கூலித்தொழிலாளர்கள் காலை 7 மணிக்கு வேலைக்கு வரவில்லையென்றால், அவர்களை சவுக்கால் அடித்து, சாணிப்பால் ஊற்றுவார்கள். எங்களின் போராட்டம்தான், அந்தக் கொடுமைகளுக்கு முடிவுகட்டியது. ‘விவசாயக் கூலித்தொழிலாளர்களை இனிமேல் சவுக்கால் அடிக்க மாட்டோம்’ என்று கலெக்டர் முன்பு பண்ணையார்களைக் கையெழுத்துப் போடவைத்தது கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம்.

1952-ல், திருத்துறைப்பூண்டியில் மிகப்பெரிய போராட்டம் நடத்தினோம். அதையடுத்து, பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தை ராஜாஜி அரசு கொண்டுவந்தது. அதற்கு மிராசுதார்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர்களிடம் ராஜாஜி, ‘புயல் வீசினால் பெரிய மரங்களெல்லாம் சாய்ந்துவிடும். இப்போது கம்யூனிஸ்ட் புயல் வீசிக்கொண்டிருக்கிறது. அதை நீங்கள் எதிர்த்தால் அழிந்துபோவீர்கள்’ என்றார். கம்யூனிஸ்ட்களின் போராட்டங்களால்தான் மக்களுக்கான அடிப்படைச் சட்டங்கள் அனைத்தும் கொண்டு வரப்பட்டன.”

“கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கங்களால் தொழில் சூழல் பாதிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டுவரும் குற்றச்சாட்டு குறித்து...”

“அது தவறான குற்றச்சாட்டு. உதாரணமாக திருப்பூரை எடுத்துக்கொண்டால், அங்கு லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. அங்கே தொழிலுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் போராடுகிறோம். அந்தத் தொழிலாளிகளின் உரிமைகளைப் பாதுகாத்திருப்பது கம்யூனிஸ்ட் கட்சிதான். சொல்லப்போனால், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கம்யூனிஸ்ட்கள் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியுள்ளார்கள். நெய்வேலியில் என்.எல்.சி, திருச்சியில் பெல், சேலம் உருக்காலை உட்பட பல முக்கிய தொழிற்சாலைகள் வருவதற்கு கம்யூனிஸ்ட் தலைவர்களே முக்கியக் காரணம்.

‘நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனம் தொடங்குவது சாத்தியமல்ல’ என்று ஆங்கிலேயர் ஆட்சியில் கூறிவிட்டனர். சுதந்திரத்துக்குப் பிறகு, பழுப்பு நிலக்கரியை ஜெர்மனிக்கு அனுப்பி, நிபுணர்களிடம் அறிக்கை பெற்று, என்.எல்.சி-யை ஆரம்பிக்கக் காரணமாக இருந்தவர் கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி.

சாதியவாதம், மதவாதம், இனவாதம் போன்றவற்றை முன்னிறுத்துகிற கட்சிகள் எளிதாக வளர்ந்துவிடும். ஆனால், கம்யூனிஸ்ட்கள் வளர்ச்சியை ஆதிக்க சக்திகள் ஒருபோதும் விரும்பாது.

‘திருச்சியில் பெல் நிறுவனம் ஆரம்பிப்பதற்கு சாத்தியமில்லை’ என்று சொல்லிவிட்டார்கள். உடனே கல்யாணசுந்தரம், அனந்தநம்பியார் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் காமராஜரைச் சந்தித்துப் பேசினர். ‘தொழில் நடத்துவதற்கு தண்ணீர், விரிவாக்கத்துக்கான இடம், ஏற்றுமதிக்குத் தேவையான போக்குவரத்து வசதி ஆகிய மூன்றும் அவசியம். இந்த மூன்று வசதிகளும் திருச்சியில் உள்ளன’ என்று சொல்லி காமராஜரை சம்மதிக்க வைத்தனர். இதேபோல் சேலம் உருக்காலை, ஆவடி டேங்க் தொழிற்சாலை ஆகியவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணியிலும் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. இதுபற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறேன்.

இவைமட்டுமல்ல, தமிழ் மொழிக்காக கம்யூனிஸ்ட்கள் ஆற்றியுள்ள பங்கு முக்கியமானது. அதனால்தான், `தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்ட வேண்டும் என்று 77 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த தியாகி சங்கரலிங்கனார், ‘நான் இறந்தால், என் உடலை கம்யூனிஸ்ட்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்றார். அவரின் உடலை கே.டி.கே.தங்கமணியும் கே.பி.ஜானகியம்மாளும் தான் வாங்கினார்கள். ஆகவே, நல்லவை அனைத்தையும் தொடங்கிவைத்தவர்கள் கம்யூனிஸ்ட்கள்தாம். சுதந்திரப் போராட்டம் என்றாலும் அதில் அதிகமாக உயிர்நீத்தவர்களும் சிறைக் கொடுமைகளை அனுபவித்தவர்களும் கம்யூனிஸ்ட்கள்தாம்.”

“இவ்வளவு தியாகங்கள் செய்தும் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் சக்தியாக கம்யூனிஸ்ட் இயக்கம் வளராதது ஏன்?”

“சாதியவாதம், மதவாதம், இனவாதம் போன்றவற்றை முன்னிறுத்துகிற கட்சிகள் எளிதாக வளர்ந்துவிடும். ஆனால், கம்யூனிஸ்ட் களின் வளர்ச்சியை ஆதிக்கச் சக்திகள் ஒருபோதும் விரும்பாது. வகுப்புவாதத்துக்கு எதிராகவும், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் சமரசமின்றி போராடுவது கம்யூனிஸ்ட்கள் மட்டும்தான். ‘என் நம்பர் ஒன் எதிரி கம்யூனிஸ்ட்கள். அவர்கள் சட்டமன்றத்துக்குள் வந்துவிட்டார்கள். அவர்களை அடக்கி வைத்துவிடுவேன்’ என்று பகிரங்கமாக ராஜாஜி கூறினார். கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாததால் கம்யூனிஸ்ட்களுக்கு நிறைய சிக்கல்கள் உள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த எத்தனை எதிர்ப்புகள் பாருங்கள். கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக மூடப்பழக்கங்களைப் பயன்படுத்து கிறார்கள். இதுபோல் பல சவால்களை கம்யூனிஸ்ட்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.”

“மத்திய ஆட்சியில் பா.ஜ.க வலுவாக அமர்ந்துவிட்டது. கம்யூனிஸ்ட்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?”

“ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார்கள். ஆனால், இருக்கும் வேலையே பலருக்கும் பறிபோகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை விற்கிறார்கள். கார்ப்பரேட்களுக்காக மட்டுமே செயல்படும் அரசாக இது இருக்கிறது. இந்த ஆட்சியின் தேசவிரோதக் கொள்கைகளையும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் எதிர்த்துப் போராடித்தான் ஆக வேண்டும். இந்த ஆட்சியை நாங்கள் எதிர்கொள்வோம்.”

- தளராத உறுதியுடன் வெளிப்படுகின்றன வார்த்தைகள்.