மிசா கைது தொடர்பான சர்ச்சை, பஞ்சமி நில விவகாரம், ‘சர்வாதிகாரி’ பேச்சு என தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சுற்றிவரும் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. இந்தச் சமூக ஊடகத் தாக்குதலை, தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி சரியாக எதிர்கொள்ளவில்லை என்று உடன்பிறப்புக்கள் உஷ்ணமாகியிருக்கின்றனர். இந்த நிலையில், மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ-வும் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“பஞ்சமி நிலம், மிசா கைது விவகாரங்களில் தி.மு.க தரப்பிலிருந்து உறுதியான பதில்களைக் கொடுப்பதில் என்ன தயக்கம்?”

“என்ன கேள்வி என்பதைவிட அதை யார் கேட்கிறார்கள் என்பது முக்கியம். தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்தால், நீங்கள் ஆதாரங்களை எங்களிடம் கேட்பது நியாயம். தி.மு.க இப்போது எதிர்க்கட்சிதான். எங்கள்மீது கேள்வி எழுப்பும் ஆளுங்கட்சியின் கையில்தான் அனைத்து ஆவணங்களும் அதிகாரமும் இருக்கின்றன. அவர்களே இதுபோல் கேள்வி கேட்பது மட்டமான அரசியல்.”

“உங்கள் தரப்பில் உள்ள ஆதாரங்களை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே?”

“பஞ்சமி நிலம் தொடர்பான பட்டா ஆதாரம், மிசா கைதுக்கான ஆதாரமான இஸ்மாயில் கமிஷன் ரிப்போர்ட இரண்டையும் வெளியிட்டுவிட்டோம். அதற்குமேல் என்ன வேண்டும்? ஆளுங்கட்சிகளான பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க மீது ஆக்கபூர்வமான விமர்சனங்களை தி.மு.க முன்வைக்கிறது. எங்கள் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாதவர்கள், பொய்யான செய்திகளைப் பரப்பி பிரச்னையை திசைதிருப்புகின்றனர்.”

“பஞ்சமி நில விவகாரத்தில் மூலப்பத்திரத்தை வெளியிடவேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் கேட்டிருக்கிறாரே?”

“நான் பரம்பரைப் பண்ணையார் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். எங்களின் குடும்பச் சொத்துகள் குறித்த அனைத்து ஆவணங்களும் எங்கெங்கே இருக்கின்றன என்ற விவரங்கள் எனக்கே முழுமையாகத் தெரியாது. இந்தியாவைப் பொறுத்தவரையில் நில ஆவணங்கள் சம்பந்தப்பட்ட பதிவுகள், குளறுபடிகள் நிறைந்தவை. பட்டா, பதிவு, சொத்து வரி, மின் இணைப்பு என ஒவ்வொன்றும் தனித்தனி நபர்களின் உரிமைகளில் இருப்பது போன்ற குழப்பமான பதிவுகள்தான் இங்கே இருக்கின்றன. பட்டாவைக் காண்பித்தால், மூலப்பத்திரம் எங்கே என்பார்கள். அதைக் காண்பித்தால், வேறு எதையாவது கேட்பார்கள். மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தவிடாமல் தி.மு.க-வைச் சுற்றலில் விடவேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்!”

“தி.மு.க-வை குறிவைத்து எழுப்பப்படும் இப்படியான கேள்விகளின் பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா?”

“வேறு யார்... பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸ்-ஸும்தான். இதற்காகவே ‘கதிர் நியூஸ்’ என்ற வெப்சைட்டை நடத்திவருகின்றன. இதற்கு ஆலோசனை வழங்க ஒரு குழுவை ஏற்படுத்தியிருக்கின்றன. சென்னை ஐ.ஐ.டி-யில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் ஃபாத்திமா லத்தீப் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள சுதர்சன் பத்மநாபன், இந்த ஆலோசனைக் குழுவிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலும் மூத்த உறுப்பினராக இருக்கிறார். ‘இந்துத்துவத்தை விதைப்பது, கலவரத்தைப் பரப்புவது, திராவிடத்தைத் தாக்குவது’ ஆகிய வியூகங்களை வகுத்துக் கொடுப்பதே அந்தக் குழுவினர்தான்.”

“தேசிய கட்சியான பா.ஜ.க மாநிலக் கட்சியான தி.மு.க-வைக் குறிவைத்து தாக்கவேண்டிய அவசியம் என்ன?”

“இன்றைய சூழலில், இந்தியாவில் பா.ஜ.க-வை மிரளவைக்கும் அளவுக்கு பலமான எதிரி தி.மு.க-மட்டுமே. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மட்டும் இதைச் சொல்லவில்லை. கொள்கைகளின் அடிப்படையிலும் சொல்கிறேன். சமத்துவம், சமூகநீதி என அடித்தட்டு மக்களுக்கான உரிமைகளைப் பேசிவரும் தி.மு.க-வின் அடிப்படைக் கொள்கைகளுக்கு நேரெதிரான கொள்கைகளைக் கொண்டவர்கள் பா.ஜ.க-வினர். இவைதான் தி.மு.க-வுக்கு எதிராக அவர்களைத் தூண்டுகிறது.”

“உங்கள் கட்சியினரே, ‘தி.மு.க-வின் ஐ.டி விங் சரியான பதிலடி கொடுக்கவில்லை’ என்கிறார்களே?”

“மக்கள் நலன், தேர்தல் வெற்றி என்ற கனவுடன் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, எங்களை திசை திருப்புவதற்காக எதிரிகள் இதுபோன்ற வதந்திகளைக் கிளப்பிவிடுகின்றனர். அவர் களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால், எங்கள் பாதையிலிருந்து நாங்கள் விலகிவிடுவோம். எதிரிகளின் எதிர்பார்ப்புகளை நாங்கள் ஒருநாளும் பூர்த்தி செய்ய மாட்டோம். பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க-வினர் தி.மு.க-வை குறிவைத்து அவதூறு செய்திகளைப் பரப்புவதற்காக சில நபர்களை கூலிக்கு நியமித்து இரண்டாம் தர வேலைகளைச் செய்துவருகின்றனர். இதுபோன்ற சாக்கடைச் சண்டைகளை தி.மு.க ஐ.டி விங் ஒருபோதும் செய்யாது. எங்கள் செயல்பாடு எப்படி என்று எங்கள் தலைவருக்கு நன்றாகத் தெரியும்!”