Published:Updated:

நீட்: பாஜக வெளிநடப்பு; சட்டப் போராட்டம் நடத்த தீர்மானம்- அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நடந்தது என்ன?

அனைத்துக் கட்சி கூட்டம்
News
அனைத்துக் கட்சி கூட்டம்

தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாகச் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக, சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக, பா.ஜ.க உள்ளிட்ட 13 கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள். மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கவிருக்கும் நிலையில், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் இந்த முறை கலந்தாய்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் தேர்வு விலக்கு - அனைத்துக் கட்சிக் கூட்டம்
நீட் தேர்வு விலக்கு - அனைத்துக் கட்சிக் கூட்டம்

சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு நீண்ட நாள்கள் ஆகியும் ஒப்புதல் வழங்காத நிலையில், அவருக்கு அழுத்தம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேச முயன்றபோது, அவரைச் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை என்று முதல்வர் குறிப்பிட்டிருந்தார். அடுத்த கட்டமாகக் குடியரசுத் தலைவரைச் சந்திக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. தமிழகத்தில் பா.ஜ.க தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வில் விலக்கு பெறுவதில் உறுதியாக இருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின், ``திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் நீட் தேர்வு விலக்கு தொடர்பாகப் பிரதமரைச் சந்தித்து கோரிக்கை வைத்தேன். நமது மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்துவருகிறார்கள். சட்டமன்றத்தில், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட முன்வடிவை ஒரு மனதாக நிறைவேற்றினோம். அப்படி நிறைவேற்றிய சட்ட முன்முடிவை ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். ஆனால், அவர் அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் வைத்திருக்கிறார்" என்று பேசினார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மேலும், ``ஒரு சட்டமன்றம் சட்டம் இயற்றும் அதிகாரத்தின் கீழ் ஒரு சட்டத்தை நிறைவேற்றும்போது, அதை ஆளுநர் மதித்து ஒப்புதல் அளிப்பதுதான் மக்களாட்சியின் தத்துவம். இது தொடர்பாக அவரை நேரில் சந்தித்து கோரிக்கைவைத்தும் அவர் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை. மாநில உரிமையும், சட்டமியற்றும் அதிகாரமும் கேள்விக்குறியாக்கப்படும் நிலை உருவானதால்தான் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஒரு வரைவு தீர்மானம் எடுத்துரைக்கப்படும். நமது அனைவரின் எண்ணமும், தமிழகத்தில் இந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான். அனைவரும் இந்த வரைவு தீர்மானத்தின் மீது தங்களின் கருத்துகளைக் கூற வேண்டும்" என்று தனது தொடக்க உரையைப் பேசி முடித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடைபெற்றுக்கொண்டிருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக சார்பில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார். வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``இந்த- கூட்டத்துக்கு பாஜக-வுக்கு அழைப்பு விடப்பட்டது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என்னைக் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது என்பது உண்மைக்குப் புறம்பானது. இந்தக் கூட்டத்தில் பாஜக-வின் நிலைப்பாட்டைத் தெரிவித்துவிட்டு, இந்தத் தீர்மானத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கூறி வெளியே வந்திருக்கிறோம்" என்று கூறினார்.

வானதி ஸ்ரீனிவாசன்
வானதி ஸ்ரீனிவாசன்

அதிமுக கட்சி சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``நீட் தேர்வு ரத்து செய்ய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும். நீட் தேர்வு எதிர்ப்பில் அதிமுக உறுதியாக உள்ளது'' என்று கூறினார். பாஜக தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவதில் உறுதியாக இருப்பதாகவே கூட்டத்தில் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் தங்களின் கருத்துகளை முன்வைத்தனர்.

இந்தக் கூட்டம் முடிந்த பின்னர், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். ``இந்த நீட் தேர்வு மாணவர்களின் கனவைச் சிதைப்பது மட்டுமின்றி, கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைப்பதாகவும் அமைந்துவிட்டது. மாநில உரிமைகளை நிலைநாட்டவும், நமது மாணவர்களின் கனவை நிறைவேற்றவும், தமிழ்நாடு சட்டமன்றத்தில், ஒரு சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அனுப்பப்பட்ட முன்வடிவுவை மாநில ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு ஏற்றதல்ல என்று கருதப்படுகிறது" என்று பேசினார்.

- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தொடர்ந்து பேசிய அவர், ``தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, முதல்வர் ஆளுநரை நேரில் சென்று சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இந்தக் கூட்டத்தில் விரிவான ஆலோசனை செய்யப்பட்டது. நாமும் நமது மாநிலமும் அடைந்துள்ள வளர்ச்சி, சமூகநீதிக்கான அரசியல், சட்டம் மற்றும் மக்கள் போராட்டங்களின் மூலமே பெற்றுள்ளோம் என்ற அடிப்படையில், ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி கனவைச் சிதைத்திடும், மாநில சுயாட்சித் தத்துவத்தைச் சீர்குலைத்திடும் நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்கிட, சட்டரீதியான நடவடிக்கை எடுத்திட அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து முடிவு செய்துள்ளன.

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற சட்டரீதியாகப் போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மூத்த சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நீட் விலக்கு சோதாவை ஆளுநர் இன்னும் குடியரசுத் தலைவ்ருக்கு அனுப்பாமல் இருப்பது சட்டமன்ற மாண்பைச் சிதைப்பதாக உள்ளது. நீட் எதிர்ப்புக்கு பாஜக தவிர்த்து மற்ற 12 கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. நீட் விலக்கு தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சரை மீண்டும் சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.