Published:Updated:

``அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள்" - ஓ.பி.எஸ்

ஓபிஎஸ்

அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள் என ஓ.பி.எஸ் தனது அறிக்கை மூலமாக தெரிவித்திருக்கிறார்.

``அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள்" - ஓ.பி.எஸ்

அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள் என ஓ.பி.எஸ் தனது அறிக்கை மூலமாக தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ஓபிஎஸ்

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், ஓ.பி.எஸ் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டார் எனக் கூறி அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகள் மற்றும் பொறுப்புகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஓ.பி.எஸ் உடன் ஆதரவாளர்களாக இருந்த வைத்திலிங்கம், பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கப்படுவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சிலரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்தார். இவ்வாறு அதிமுகவில் நாளுக்கு நாள் விரிசல் விரிவடைந்து கொண்டே செல்கிறது.

ஓபிஎஸ் அறிக்கை
ஓபிஎஸ் அறிக்கை

இந்த நிலையில் ஓ.பி.எஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், `` அதிமுகவிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் அவர்களது வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதி கழகச் செயலாளர் மற்றும் தொகுதி கழக இணை செயலாளர்கள் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டு ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் மீண்டும் அந்த பொறுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.

காலியாக உள்ள பொறுப்புகள் விரைந்து நிரப்பப்படும். கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், தொகுதி கழகச் செயலாளர் மற்றும் தொகுதி கழக இணைச் செயலாளர் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்திருக்கிறார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!