Published:Updated:

FACT CHECK: `பள்ளி மாணவர்களுக்கு ஸ்டாலின் படத்துடன் பைகள்' - ஸ்டிக்கர் ஒட்டிக் கொடுத்ததா திமுக அரசு?

Vikatan Fact Check
News
Vikatan Fact Check

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டிய புத்தகப் பைகளைக் கொடுத்ததா திமுக அரசு... உண்மை என்ன?

கடந்த மூன்று நாள்களாக பா.ஜ.க ஆதரவாளர்கள் சிலர், `தி.மு.க அரசின் லட்சணம் இதுதான்!' என்ற தொனியில் கருத்துகளைப் பதிவிட்டு, புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவந்தனர். தி.மு.க எம்.பி கனிமொழி, முதலமைச்சர் ஸ்டாலின் படம் போடப்பட்ட தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டிய புத்தகப் பையை, அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கு வழங்கும் காட்சி அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றிருந்தது.

புகைப்படம்
புகைப்படம்

இந்தப் புகைப்படத்தை முதலில், `Annamalai For Youth' என்று பெயரிடப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் மீம் வடிவில் பகிர்ந்திருந்தனர். அந்த மீமில், `பழைய புத்தகப் பைகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமே இருக்கட்டும் என்று முதல்வர் சொல்லிவிட்டார்' எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்னதையும், கனிமொழி தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டிய படத்தை அரசுப் பள்ளி மாணவிக்கு வழங்குவது போன்ற புகைப்படம் ஒன்றையும் இணைத்துப் பதிவிட்டிருந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதையடுத்து பா.ஜ.க ஆதரவாளர்கள் சிலர், ``தி.மு.க சாயம் வெளுத்துவிட்டது. அன்று அரசுப் பள்ளி மாணவர்களின் புத்தகப் பையில் இ.பி.எஸ் படமே இருக்கட்டும் என்று பெருந்தன்மையாக இருப்பதுபோல் நடித்தனர். அதன் பிறகு அரசு விழாக்களில்கூட முதல்வர் படம் இடம் பெறாது என்றனர். இப்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கனிமொழியே, ஸ்டாலின் படம் போட்ட தமிழக அரசின் புத்தகப் பையை வழங்குகிறார். அரசு விழாவில் நடந்த இந்தச் சம்பவம் யார் கண்ணிலும்படவில்லையா?'' என்று பதிவிட்டு இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துவருகின்றனர்.

மேலும் சிலர், ``ஸ்டிக்கர் கடைக்காரர்களை வாழ வைப்பதற்காகத்தான் முதல்வர் இப்படியொரு திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார். அதுகூடப் புரியாமல் முதல்வரைக் குறை சொல்வதா?'' என்று நக்கல் தொனியில் பதிவிட்டிருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உண்மை என்ன?

இந்தப் புகைப்படத்தின் விளைவாக, `அரசு சார்பில் வழங்கப்படும் பள்ளி புத்தகப் பைகளில், தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது' என்று சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது உண்மைதானா என்று தெரிந்துகொள்ள கனிமொழி புத்தகப் பை வழங்கும் புகைப்படத்தை, கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் முறையில் தேடிப் பார்த்தோம். அப்போது, நமக்குக் கனிமொழியின் ட்விட்டர் பக்க பதிவு ஒன்று கிடைத்தது. அதில் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, ``திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் திருமிகு. G.கோவிந்தம்மா அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று 500 மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்'' என்று பதிவிட்டிருந்தார் கனிமொழி.

கனிமொழி
கனிமொழி

இதன் மூலம், தமிழ்நாடு அரசு வழங்கும் பள்ளிப் புத்தகப் பைகளில் தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறது என்பதில் உண்மை இல்லை என்று தெரியவந்தது. அதே சமயம் தி.மு.க மகளிரணி விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டிக்கர்கள் ஒட்டிய பைகளை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கனிமொழி வழங்கியிருக்கிறார் என்பதும் புலப்பட்டது.