Published:Updated:

பூட்டிய வீட்டில் ஒரே குடும்பத்தினரின் உடல்கள்! - இறந்தவர்களுடன் 5 நாள்கள் இருந்த குழந்தை

குடும்பத் தலைவர் சங்கர் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. ஒட்டுமொத்த குடும்பத்தையே இழந்து நிற்கும் அவரால் பேசக்கூட முடியவில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பெங்களூரு, பயதர்ஹலி என்ற இடத்தில் வசிப்பவர் சங்கர். பத்திரிகையாளரான சங்கர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்தினருடன் சண்டைபோட்டுக்கொண்டு வீட்டைவிட்டுச் சென்றிருந்தார். அவர் ஐந்து நாள்கள் கழித்து, அதாவது வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு வந்து கதவைத் தட்டிப்பார்த்தார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவரின் மனைவி உட்பட குடும்பத்திருந்த ஐந்து பேர் இறந்துகிடந்தனர். இரண்டரை வயதுக் குழந்தை மட்டும் இறந்த உடல்களுடன் இருந்தது. அந்தக் குழந்தையும் அரை மயக்கத்தில் இருந்தது. குழந்தையின் தாய் சிஞ்சனா (34), பாட்டி பாரதி (51), குழந்தையின் சித்தி சிந்தூரனி, குழந்தையின் மாமா மது சாகர் ஆகியோர் இறந்துகிடந்தனர்.

தற்கொலை செய்துகொண்ட குடும்பம்
தற்கொலை செய்துகொண்ட குடும்பம்

அவர்களுடன் ஒன்பது மாதக் குழந்தைகூட இறந்துகிடந்தது. இறந்தவர்கள் கொலை செய்யப்பட்டதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை என்கிறார்கள் காவலர்கள். அவர்கள் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கூடுதல் கமிஷனர் முகர்ஜி இது குறித்துக் கூறுகையில், ``என்ன காரணத்துக்காக தற்கொலை செய்தனர் என்று இன்னும் தெரியவரவில்லை. உயிருடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. இறந்தவர்கள் உடல் சனிக்கிழமை (இன்று) பிரேத பரிசோதனை செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

குடும்பத் தலைவர் சங்கர் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. ஒட்டுமொத்த குடும்பத்தையே இழந்து நிற்கும் அவரால் பேசக்கூட முடியவில்லை. இது குறித்து அவர் கூறுகையில், ``எனது மகள்கள் கணவனுடன் சண்டைபோட்டுக்கொண்டு எங்களது வீட்டுக்கு வந்திருந்தனர். பிரச்னையைப் பேசித் தீர்த்து, அவர்களை கணவன் வீட்டுக்கு அனுப்பாமல், அவர்களை எனது மனைவி வீட்டிலேயே இருக்க ஊக்கப்படுத்தினார். எனது மகள்களைப் படிக்கவைக்க மிகவும் கடுமையாக உழைத்தேன். சிஞ்சனா, தனது குழந்தைக்கு காது குத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கணவருடன் சண்டையிட்டுக்கொண்டு எங்களது வீட்டுக்கு வந்திருந்தார்.

தலைமைக் காவலர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை! காவலர்கள் அதிர்ச்சி!

எந்தவிதப் பணப் பிரச்னையும் கிடையாது’ என்றார். பக்கத்து வீட்டில் வசித்தவர்களிடம் கேட்டதற்கு, சங்கர் தனது மகனுடன் சண்டையிட்டுக்கொண்டு வீட்டைவிட்டு புறப்பட்டுச் சென்றார் என்று தெரிவித்தனர். அவர் வெளியில் சென்றவுடன் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்த போலீஸார், உடல் மிகவும் அழுகிய நிலையில் இருப்பதால் அவர்கள் தற்கொலை செய்து ஐந்து நாள்கள் ஆகியிருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த விவகாரம் பெங்களுரூவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு