Published:Updated:

வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே மக்களவையில் நிறைவேற்றம்!

நாடாளுமன்றம்
News
நாடாளுமன்றம்

கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. டிசம்பர் மாதம் 23-ம் தேதி வரை குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் ஒரே `நேரத்தில் கூட்டங்கள் நடைபெறும். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றி கூட்டங்கள் நடத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு வருடமாக டெல்லியை முற்றுகையிட்டுப் போராடிய விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக, அண்மையில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்தார். வரவிருக்கும் குளிர்காலக் கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார். அதன்படி, ஏற்கெனவே நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி காரணமாக அவை கூடிய ஒரு சில நிமிடங்களிலேயே மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

தொடர்ந்து 12 மணிக்கு அவை கூடியபோது, மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சிகள் மசோதா தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே மக்களவையில் மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது.