Published:Updated:

லண்டன்: ``தனிநபர் தலைமையில் பென்னிகுக் சிலை திறப்பு ஏற்பாடா?" - விவசாயிகள் கண்டனம்

லண்டனில் பென்னிகுக் சிலை

தென்தமிழகத்தில் 5 மாவட்ட மக்கள் கடவுளாக போற்றக்கூடிய ஜான் பென்னிகுக் சிலை திறப்பு முறையாக நடைபெறவில்லை என விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

லண்டன்: ``தனிநபர் தலைமையில் பென்னிகுக் சிலை திறப்பு ஏற்பாடா?" - விவசாயிகள் கண்டனம்

தென்தமிழகத்தில் 5 மாவட்ட மக்கள் கடவுளாக போற்றக்கூடிய ஜான் பென்னிகுக் சிலை திறப்பு முறையாக நடைபெறவில்லை என விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Published:Updated:
லண்டனில் பென்னிகுக் சிலை

முல்லைப்பெரியாறு அணை கட்டிய ஜான் பென்னிகுக் சிலை அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பரளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார்.

பென்னிகுக்
பென்னிகுக்

அதன்படி, கேம்பரளியில் ஜான் பென்னிகுக்கின் மார்பளவு சிலை இன்று திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இங்கிலாந்து ராணி எலிசபெத் இறந்ததால் அங்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு வருவதால் பென்னிகுக் சிலை திறப்பு விழா நடைபெறவில்லை. தென்தமிழகத்தில் 5 மாவட்ட மக்கள் கடவுளாக போற்றக்கூடிய ஜான் பென்னிகுக் சிலை திறப்பு முறையாக நடைபெறவில்லை என விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பென்னிகுக் சிலை திறப்பு விழாவுக்கு தமிழக அரசு சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கம்பம் எம்எல்ஏ ராமகிருஸ்ணன் ஆகியோர் செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் செப்டம்பர் 6-ம் தேதியே தனித்தனியாக விமானத்தில் செல்ல, அவர்கள் பின்னே லண்டன் தமிழ் சங்கம் அழைத்ததாகக் கூறி பெரியகுளம் எம்எல்ஏ சரவணன், தேனி திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன், தேசிய செட்டியார்கள் பேரவை தலைவர் ஜெகநாத்மிஸ்ரா ஆகியோர் கிளம்பினர்.

திறப்பு விழாவுக்கு சென்ற திமுகவினர்
திறப்பு விழாவுக்கு சென்ற திமுகவினர்

இந்த நிலையில், ``தமிழக அரசு லண்டனில் பென்னிகுக் சிலை நிறுவுவதில் மகிழ்ச்சிதான். அதில் தமிழக விவசாயிகள் பங்கேற்க வைத்திருக்கலாம். அதைவிடுத்து அணை விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு எதிராக பேசிய கம்பம் ராமகிருஸ்ணனை அரசு சார்பில் அனுப்புகிறார்கள். லோயர்கேம்ப்பில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட பென்னிகுக் நினைவு மண்டபம் பராமரிப்பின்றி உள்ளது. அணை விவகாரத்தில் உரிமைகளை பறிகொடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பேபி அணையைப் பலப்படுத்த முடியாத நிலை உள்ளது. தமிழகத்துக்கு பாதகமாக ரூல் கர்வ் முறையை ரத்து செய்ய நடவடிக்கை இல்லை" என்பன போன்ற விஷயங்களை தமிழக கவனத்தில் கொள்ள வேண்டும் என விவசாய சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம். ``கேம்பரளியில் பென்னிகுக் சிலை நிறுவுவதில் ஆரம்பத்தில் இருந்தே குழப்பம் நிலவி வந்தது. அரசு நிகழ்வை முறையாக திட்டமிட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்தில் இருக்கக்கூடிய சந்தன பீர் ஒலி என்ற தனிநபர் சுயலாபத்திற்காக இவ்விழாவை அவரே ஏற்பாடு செய்தது போல மாயத்தோற்றத்தை ஏற்படுத்தினார். நன்றாக நடக்கவேண்டிய நிகழ்வை சிதைக்கும் வகையில் செய்துவிட்டார். கடந்த 7 ஆண்டுகளாக அந்த நபரின் பதிவுகளை சேகரித்துள்ளோம்.

அன்வர் பாலசிங்கம்
அன்வர் பாலசிங்கம்

அவர் கேம்பரளி சிலை திறப்பு நிகழ்வுக்கு லண்டன் மெட்ரோவில் விளம்பரம் கொடுத்துள்ளார். இதுவரை இவ்வாறான விளம்பரம் வந்ததே இல்லையென்ற தகவலையும் பரப்புகிறார். ஆனால் மெட்ரோவில் யார் வேண்டுமானாலும் பணம் கட்டினால் விளம்பரம் கொடுக்கலாம் என்ற நிலை உள்ளது. மேலும் அந்த விளம்பரத்தில் தன்னை தொடர்பு கொள்ள முகவரியைக் கொடுத்திருக்கிறார். பென்னிகுக் பெயரைப் பயன்படுத்தி ஏற்கெனவே பணம் வசூலித்ததாகவும் அவர்மீது புகார் உள்ளது.

தமிழக அரசு சார்பில் வெகுவிமர்சையாக நடந்திருக்க வேண்டிய நிகழ்வு முறையாக நடக்கவில்லை. தமிழக அமைச்சர்களை, எம்எல்ஏக்களை வரவேற்றது யார் என்பதுகூட தெரியவில்லை. இந்நிகழ்வின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை என்ன நடந்தது என்பதை அறிக்கையாக முதல்வரைச் சந்தித்து சமர்பிக்க முடிவு செய்துள்ளோம். முல்லைப்பெரியாறு அணைக்காக 35 ஆண்டுகளாகப் போராடி கொண்டிருப்பவர்களுக்கு மரியாதை இல்லை. முல்லைப்பெரியாறு அணைக்காக 3 பேர் உயிர் நீத்தனர். சீலையம்பட்டி சேகர், சின்னமனூர் ராமமூர்த்தி, தேனி ஜெயபிரகாஷ் மூவருக்கும் மரியாதை இல்லை. முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக எழுதியவர் அதற்காகவே காலமெல்லாம் உழைத்தவர் கம்பம் அப்பாஸ். ராயப்பன்பட்டி ரத்தினசாமி, மேலூர் சீமான் அம்பலம் ஆகியோரும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர்.

திமுக-வினருடன் சந்தனபீர்ஒலி
திமுக-வினருடன் சந்தனபீர்ஒலி

ஆனால் எவ்வித சம்பந்தமும் இல்லாத, முல்லைப்பெரியாறு அணைக்காக உழைக்காத, செயல்படாதவர் அனைத்தும் தன்னால்தான் நடந்தது என முன்னிலைப்படுத்திக் கொள்கிறார். இதை மத்திய, மாநில உளவுத்துறை கண்காணிக்க தவறிவிட்டது. அவர்கள் கவனித்து அறிக்கை கொடுத்திருக்க வேண்டும். இது தொடர்பாக விரிவான அறிக்கையை நாங்கள் கொடுக்க உள்ளோம்" என்றார்.

முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை

``முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக ஆவணப்படம் எடுத்துள்ளதாகவும் அதை 2018 ஜனவரி மாதம் பொங்கல் விழாவின்போது வெளியிடுவதாக அறிவித்திருந்தார். பிறகு லண்டனில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு முல்லைப்பெரியாறு அணை தொடர்பான ஆவணப்படம் எடுப்பதாகவும் அறிவித்திருந்தார். ஆவணப்படம் என்ற பெயரில் அணையை முழுமையாக படம், வீடியோ எடுத்துள்ளார். அப்போது தேனியில் நடந்த பொங்கல் விழாவுக்கு பென்னிகுக் வாரிசுகளை அழைத்து வருவதாகக் கூறி வைகோ, ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரையே ஏமாற்றினார். பென்னிகுக் தொடர்பாக படம் எடுக்கப்போவதாகவும் சிலை வைக்கபோவதாகவும் வசூல் நடத்தினார் என்பன போன்ற புகார்களுக்கு உள்ளானவரை தமிழக அரசு கவனிக்காமல் விட்டுவிட்டதன் காரணம் என்ன?" என தேனி மாவட்ட விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.