Published:Updated:

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட ஃபரூக் அப்துல்லா மறுப்பு!

ஃபரூக் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் ஒரு முக்கியமான காலகட்டத்தை கடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீருக்கும், நாட்டிற்கும் தொடர்ந்து சேவையாற்ற விரும்புகிறேன் என ஃபரூக் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட ஃபரூக் அப்துல்லா மறுப்பு!

ஜம்மு காஷ்மீர் ஒரு முக்கியமான காலகட்டத்தை கடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீருக்கும், நாட்டிற்கும் தொடர்ந்து சேவையாற்ற விரும்புகிறேன் என ஃபரூக் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ஃபரூக் அப்துல்லா

ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறவிருப்பதால், அரசியல் கட்சிகள் தேர்தலில் தங்கள் சார்பாக யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து விவாதித்து வருகின்றன. மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜ.க மற்றும் எதிர்க்கட்சிகள் தங்கள் சார்பாக யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து விவாதித்து வருகின்றன.

அந்த வகையில், முக்கியமாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிக்க 22 எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவார், ஃப்ரூக் அப்துல்லா உள்ளிட்டோரின் பெயர்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. சரத் பவார் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஃப்ரூக் அப்துல்லாவும் போட்டியுட மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், ``அடுத்த மாதம் நடைபெற உள்ள, ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சியின் வேட்பாளராக போட்டியிட எனது பெயரை பரிந்துரை செய்தவர்களுக்கு நன்றி. என் பெயரை இந்த தேர்தலிருந்து வாபஸ் பெற்று கொள்கிறேன் . ஜம்மு காஷ்மீர் ஒரு முக்கியமான காலகட்டத்தை கடந்து வருகிறது. அதனால் ஜம்மு காஷ்மீருக்கும், நாட்டிற்கும் தொடர்ந்து சேவையாற்ற விரும்புகிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism