Published:Updated:

``இன்று நிதிநிலை அறிக்கை மட்டும்தான் என்பது உங்களுக்குத் தெரியாதா?" -அதிமுக-வினரிடம் அப்பாவு காட்டம்

தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவையில் 2022 - 2023-ம் ஆண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

``இன்று நிதிநிலை அறிக்கை மட்டும்தான் என்பது உங்களுக்குத் தெரியாதா?" -அதிமுக-வினரிடம் அப்பாவு காட்டம்

தமிழக சட்டப்பேரவையில் 2022 - 2023-ம் ஆண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

Published:Updated:
தமிழக சட்டப்பேரவை

முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முதல் முழுமையான பட்ஜெட் இது. பட்ஜெட் உரையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாசிக்கத் தொடங்கிய நிலையில், சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு பேச வாய்ப்பு அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி மற்றும் அதிமுக-வினர் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தியதைக் கண்டித்த அதிமுக-வினர், அது குறித்து அவையில் பேச அனுமதி கேட்டு, அமளியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அப்பாவு
அப்பாவு

``சட்டமன்றத்தின் மரபை அதிமுக-வினர் காக்க வேண்டும். சட்டப்பேரவைத் தலைவர் எழுந்து நின்றால் நீங்கள் உட்கார வேண்டும். இன்று நிதிநிலை அறிக்கை மட்டும் படிக்கப்படும் என்பது முதலமைச்சராக இருந்த உங்களுக்குத் தெரியும். நீங்கள் இருவரும் முதலமைச்சராக இருந்தவர்கள். இது தெரிந்தே பேச வேண்டும் எனச் சத்தம் போடுகிறீர்கள்” என எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோரிடம் சபாநாயகர் அப்பாவு பதில் அளித்தார்.

பட்ஜெட் உரை முடிந்ததும் பேச வாய்ப்பு தருவதாக சபாநாயகர் அப்பாவு உறுதியளித்தார். ``நீங்கள் பேசுவது அவைக்குறிப்பில் இடம் பெறாது” என சபாநாயகர் தெரிவித்தார். இதையடுத்து சட்டப்பேரவையிலிருந்து பட்ஜெட் உரையைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism