Published:Updated:

புதுச்சேரி: முகக்கவசம்; அபராதம்..! - போலீஸும் நகராட்சியும் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரி

``புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து ஒற்றை இலக்க எண்ணில் வந்த நிலையில், அரசின் தவறான முடிவுகளால் மீண்டும் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது." - ரகுபதி

புதுச்சேரி: முகக்கவசம்; அபராதம்..! - போலீஸும் நகராட்சியும் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா?

``புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து ஒற்றை இலக்க எண்ணில் வந்த நிலையில், அரசின் தவறான முடிவுகளால் மீண்டும் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது." - ரகுபதி

Published:Updated:
புதுச்சேரி

புதுச்சேரி காவல்துறை மற்றும் நகராட்சியினர் முகக்கவசம் அணியாத மக்களிடம் தொடர்ந்து அபாரதம் வசூலித்து வருவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்.டி.ஐ தகவல் அடிப்படையில் ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி துணைநிலை ஆளுநர், முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், ``புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து ஒற்றை இலக்க எண்ணில் வந்த நிலையில், புதுச்சேரி மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையிலும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா, ஒமைக்ரான் தொற்று காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்து அறிவித்தது.

முகக்கவசம்
முகக்கவசம்

ஆனால் புதுச்சேரி அரசு மட்டும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதித்ததால் அண்டை மாநில மக்கள் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி லட்சக்கணக்கில் கூடி புத்தாண்டு கொண்டாடியதால் புதுச்சேரியில் மீண்டும் கொரோனா தொற்று பரவலாகி வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதுச்சேரி அரசு இதனை கருத்தில் கொள்ளாமல் இன்றளவும் முகக்கவசம் அணியாமல் செல்லும் கூலி தொழிலாளர்கள், ஏழை எளிய நடுத்தர மக்களிடம் அபராதத் தொகையாக ரூ.100/- வசூலித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கடந்த 2020 மார்ச் மாதம் முதல் 2021 அக்டோபர் 8-ம் தேதி வரை காவல்துறையினர் 5,92,47,500/- கோடி ரூபாயும், நகராட்சியனர் 6,42,22,760/- கோடி ரூபாய் என மொத்தம் 12,35,11,860/- கோடி ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளனர். இருப்பினும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க நிதி வேண்டும் என்ற காரணம் கூறி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்த புதுச்சேரி அரசு தற்போது பொங்கல் கொண்டாட்டங்களுக்கும் தடையில்லை என அறிவித்துள்ளது.

அரசின் இதுபோன்ற தவறான முடிவுகளால், வெளிமாநில மக்களால் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. இதற்கு புதுச்சேரி அப்பாவி பொதுமக்கள் எவரும் பொறுப்பாகாத நிலையில், இவர்களிடம் இன்றளவும் அபராதம் வசூலித்து வருவது ஏற்புடையதல்ல. மேலும் வீதி வீதியாக சென்று அனைத்து தரப்பு மக்களையும் கொரோனா தடுப்பூசி போட வலியுறுத்தியும், தடுப்பூசியினை அனைவருக்கும் இலவசமாக போட்டு வரும் நிலையிலும் ரூ.2/- பொருமானமுள்ள முகக்கவசத்தை இலவசமாக அளித்து, அணிய வலியுறுத்தி அபராதம் விதிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism