சசிகலாவைத் தொடர்ந்து இளவரசிக்கும் கட்டப்பட்டது அபராதத் தொகை! - பணத்தைக் கட்டியவர்கள் யார் யார்?

சிறைச்சாலையிலுள்ள இளவரசிக்கு அளிக்கப்பட்ட அபதாரத் தொகையையும் வழக்கறிஞர் டீம் கடந்த மாதம் 23-ம் தேதியன்று நீதிமன்றத்தில் செலுத்திவிட்டது.
பெங்களூரு சிறைச்சாலையிலிருக்கும் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட அபதாரத் தொகையை அவரது தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் சட்ட சம்பிராயங்களைப் பின்பற்றி நீதிமன்றத்தில் செலுத்தினார். அதன் விவரங்களை நீதிமன்றம் மூலம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் அனுப்பிவிட்டார்கள். அதையடுத்து, சசிகலாவை ரிலீஸ் செய்வது தொடர்பான ஃபைல் கர்நாடகா மாநில அரசிடம் நிலுவையில் இருக்கிறது.

அடுத்து, சிறைச்சாலையிலுள்ள இளவரசிக்கு அளிக்கப்பட்ட அபதாரத் தொகையையும் வழக்கறிஞர் டீம் கடந்த மாதம் 23-ம் தேதியன்று நீதிமன்றத்தில் செலுத்திவிட்டது. இந்தத் தகவல் நீதிமன்றம் மூலம் சிறைச்சாலைக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. இளவரசியை விடுதலை செய்வது தொடர்பான ஃபைல் மாநில அரசின் பரிசீலனையில் இருக்கிறது.
இளவரசியின் மகன் விவேக் பெயரில் 2,00,10,000 ரூபாயும், சசிகலா கணவர் நடராஜனின் சகோதர் பழனிவேல் பெயரில் 3 கோடி ரூபாயும், இன்னொரு சகோதரர் எம்.ராமச்சந்திரன் பெயரில் 3 கோடி ரூபாயும், இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா பெயரில் 1 கோடி ரூபாயும், இன்னொரு மகள் ஷகீலா பெயரில் 1 கோடி ருபாயும் என 10,00,10,000 ரூபாய் நீதிமன்றத்தில் இளவரசிக்காக (டி.டி மூலம்) செலுத்தப்பட்டிருக்கிறது.

சிறைச்சாலையிலிருக்கும் சுதாகரனுக்கு அளிக்கப்பட்ட அபதாரத் தொகையைச் செலுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகள் ஆரம்பமாகியிருக்கின்றன. இந்தக் கட்டம் முடிந்தால், மூவரும் ஒரே நேரத்தில் தண்டனைக் காலம் முடிந்த கையோடு ரிலீஸ் ஆவார்கள் என்றும் கூறப்படுகிறது,