Published:Updated:

``முன்பு ஓர் இத்தாலியப் பெண், இப்போது ஆம் ஆத்மியின் இத்தாலியா..!" - அனுராக் தாக்கூர் சாடல்

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

இரண்டு நாள்களுக்கு முன்புகூட பா.ஜ.க., குஜராத் ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா, பிரதமரின் தாயாரை விமர்சித்திருந்தாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.

``முன்பு ஓர் இத்தாலியப் பெண், இப்போது ஆம் ஆத்மியின் இத்தாலியா..!" - அனுராக் தாக்கூர் சாடல்

இரண்டு நாள்களுக்கு முன்புகூட பா.ஜ.க., குஜராத் ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா, பிரதமரின் தாயாரை விமர்சித்திருந்தாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.

Published:Updated:
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

குஜராத் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், ஆளுங்கட்சியான பா.ஜ.க-வை ஆம் ஆத்மி கடுமையாகச் சாடிவருகிறது. அதேவேளையில் பா.ஜ.க-வும் பதிலுக்கு ஆம் ஆத்மியை விமர்சித்துவருகிறது. இரண்டு நாள்களுக்கு முன்புகூட பா.ஜ.க., குஜராத் ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா, பிரதமரின் தாயாரை விமர்சித்திருந்தாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கோபால் இத்தாலியா
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கோபால் இத்தாலியா

அதில் ``பிரதமருக்கு ஏற்றவாறு, அவரின் தாயார் ஹிராபாவும் நடித்துக்கொண்டிருக்கிறார். 70 வயதை நெருங்கும் மோடியும், 100 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் அவரின் தாயாருமான ஹிராபாவும் தங்கள் நாடகத்தைத் தொடர்ந்து நடத்திவருகிறார்கள்" என இத்தாலியா பேசியதாகக் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

இந்த நிலையில் இது தொடர்பாக கோபால் இத்தாலியாவை, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விமர்சித்திருக்கிறார். தேர்தலை முன்னிட்டு குஜராத்தில் நேற்று நடைபெற்ற பேரணியில் பேசிய அனுராக் தாக்கூர், ``முன்பு ஓர் இத்தாலியப் பெண், பிரதமர் நரேந்திர மோடியை அவமானப்படுத்தினார். இப்போது ஓர் இத்தாலியா அவரின் தாயை அவமதிக்கிறார். குஜராத் முன்பு இந்த அவமானத்தை ஏற்கவில்லை, இப்போதும் அதை ஏற்காது. அதற்கு குஜராத் தகுந்த பதிலடி கொடுக்கும்" எனக் கூறினார். இதில் அனுராக் தாக்கூர், இத்தாலியப் பெண் என சோனியா காந்தியை மறைமுகமாக விமர்சித்தார்.

கடந்த வாரம் குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியைத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கான தேர்தல் தேதியை மட்டும் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.