Published:Updated:

`திமுக அமைச்சரவையில் முதல் மாற்றம்!' - ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம்!

அமைச்சர் ராஜகண்ணப்பன்

அரசு ஊழியர் ஒருவரைச் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாக எழுந்த சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன் போக்குவரத்துத்துறையிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.

`திமுக அமைச்சரவையில் முதல் மாற்றம்!' - ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம்!

அரசு ஊழியர் ஒருவரைச் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாக எழுந்த சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன் போக்குவரத்துத்துறையிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.

Published:Updated:
அமைச்சர் ராஜகண்ணப்பன்

சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் நடைபெற்ற கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் தொடர்பான கருத்தரங்கைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கிவைத்தார். அப்போது, அமைச்சரை வரவேற்கச் சென்ற தன்னை சாதிப் பெயரைப் பயன்படுத்தி அவர் திட்டியதாக முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் குற்றம்சாட்டியிருந்தார்.

விவசாயிகளுக்கு இடுபொருள்களை வழங்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன்
விவசாயிகளுக்கு இடுபொருள்களை வழங்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன்

இது தொடர்பாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ``என்னை ஐந்து முறை சாதியைச் சொல்லித் திட்டியுள்ளார். கடுமையாக ஒருமையில் பேசினார். என்னை இடமாறுதல் செய்துவிடுவேன் என்று சொன்னார். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. 57 வயதில் நான் சந்திக்காத மனக்காயத்தை சந்தித்துள்ளேன்" என்று பேசியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது, போக்குவரத்துத்துறை அமைச்சர் இலாகா மாற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் மாற்றப்படுவதாக ஆளுநர் மாளிகையிலிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆளுநர் அறிவிப்பு
ஆளுநர் அறிவிப்பு

தமிழக முதல்வரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், சிவசங்கரன் துறைகளை மாற்றி ஆளுநர் ஒப்புதல் தெரிவித்துள்ளார். தி.மு.க ஆட்சி அமைத்த பின்னர் நடைபெறும் முதல் அமைச்சரவை மாற்றம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism